New Update
/indian-express-tamil/media/media_files/i2X2QWCQQJyKdUyga3uu.jpg)
தண்டவாளத்தில் தலைவைத்து குடையின் நிழலில் தூங்கிய நபரைக் கவனித்த ரயில் ஓட்டுநர் லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தி அந்த நபரை எழுப்பும் வீடியோ (Photo Credit: X/@sachinguptaup)
தண்டவாளத்தில் தலைவைத்து குடையின் நிழலில் தூங்கிய நபரைப் பார்த்த ரயில் ஓட்டுநர் லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தி, அந்த நபரை எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தண்டவாளத்தில் தலைவைத்து குடையின் நிழலில் தூங்கிய நபரைக் கவனித்த ரயில் ஓட்டுநர் லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தி அந்த நபரை எழுப்பும் வீடியோ (Photo Credit: X/@sachinguptaup)
ரயில்பாதையில் தண்டவாளத்தில் தலைவைத்து குடையின் நிழலில் தூங்கிய நபரைப் பார்த்த ரயில் ஓட்டுநர் லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தி, அந்த நபரை எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முய்மா பிரயாக்ராஜ் என்ற இடத்தில், முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் தலைவைத்து குடை நிழலில் தூங்கிங்க் கொண்டிருந்துள்ளார். அந்த ரயில்தடத்தில் ரயில் ஓட்டி வந்த லோகோ பைலட், தண்டவாளத்தில் யாரோ ஒருவர் தூங்குவதை கவனித்து, உடனடியாக ரயிலை நிறுத்தி அந்த நபரை எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
प्रयागराज, यूपी में रेल पटरी पर एक व्यक्ति छतरी लगाकर सो रहा था। ये देखकर लोको पायलट ने ट्रेन रोक दी। फिर उसको जगाया, पटरी से हटाया। तब ट्रेन आगे बढ़ी।
— Sachin Gupta (@SachinGuptaUP) August 25, 2024
Report : @AnujTyagi8171 pic.twitter.com/F1XWSLJ55h
ஒரு நபர் ரயில் தண்டவாளத்தில் குடையுடன் தூங்குவதையும் அவரை லோகோ பைலட் ரயிலை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று எழுப்புவதையும் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆர்.பி.எஃப் மற்றும் ஜி.ஆர்.பி உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள், பிரயாக்ராஜில் இந்த சம்பவம் நடக்கவில்லை என்று ஊடகங்கள் கருத்து கேட்டபோது மறுத்துள்ளனர். மேலும், இது போன்ற எந்த தகவலும் ஓட்டுனர் அல்லது பயணிகளிடம் இருந்து வரவில்லை என்று கூறினர்.
ரயில் பிரயாக்ராஜில் இருந்து பிரதாப்கர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் அந்த நபரைக் கண்ட டிரைவர் முய்மா அருகே நிறுத்தினார். தற்போது அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.