New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/12/a14-5.jpg)
Man SURVIVES after falling into tiger enclosure Saudi Arabian zoo - சவூதியில் புலி கூண்டில் தவறி விழுந்த இளைஞர் - பதைபதைக்க வைக்கும் வீடியோ
Man SURVIVES after falling into tiger enclosure Saudi Arabian zoo - சவூதியில் புலி கூண்டில் தவறி விழுந்த இளைஞர் - பதைபதைக்க வைக்கும் வீடியோ
சவூதி அரேபியாவில் உள்ள வனவிலங்கு பூங்காவில் புலிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் பார்வையாளர் ஒருவர் தவறி விழுந்து மயங்கியுள்ளார். அதை கண்ட புலி ஒன்று அந்த நபரின் கழுத்தை கடிக்க முயற்சிக்கும் நொடி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் விலங்கியல் பூங்காவில், புலிகள் இருக்கும் இடத்திற்கும் சென்ற முகமது அப்துல் மொஹ்சன் எனும் 24 வயது இளைஞர் புலி கூண்டிற்குள் தவறி விழுந்துவிட்டார்.
இத்தகவல் உடனடியாக வனவிலங்கு பூங்கா பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட, அவர்கள் துப்பாக்கி மூலம் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி மயக்கமடைய செய்துள்ளனர்.
பின்னர் அந்த நபரை பத்திரமாக மீட்டு ரியாத் மருத்துவமனையில் அனுமதித்தனர். கழுத்து மற்றும் கால்களில் அந்த நபருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைக்கு பிறகு, தற்போது சீரான நிலைக்கு அவரது உடல்நிலை முன்னேறியுள்ளது. தவிர, காயங்களிலிருந்தும் அவர் மீண்டு வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.