ஒரு நபர் துணிச்சலாக முதலைகளுடன் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது, முதலையின் திடீர் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பலரும் துனிச்சலாக ஏதேனும் ஒரு சாகசத்தை செய்வார்கள். பல நேரங்களில் அத்தகைய சாகசங்கள் முட்டாள்தனமான தேவையற்ற ஆணிகளாக இருக்கும். சிலர், உயிரியல் பூங்காக்களில் வன விலங்குகளுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்து தங்கள் தைரியத்தை வெளிப்படுத்தும் விதமாக புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவார்கள். அவர்கள், ஆபத்து ஏதும் நேராதவரை, அந்த வனவிலங்கு தன்னை தாக்கி இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசிக்கவே மாட்டார்கள். இப்படி முட்டாள்தனமான சாகசங்களை செய்யத் துணியாதீர்கள் என்று எச்சரிக்கை செய்யும்படியாக ஒரு நிகழ்வின் வீடியொ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Just a taste… pic.twitter.com/iUVoLBZjXl
— Theo Shantonas (@TheoShantonas) October 13, 2020
அந்த வீடியோவில், ஒரு நபர் நீச்சல் குளத்தில் ஜாலியாக குளித்துக்கொண்டிருக்கிறார். அருகில் 2 முதலைகள் வருகின்றன. அவர் சிறிதும் அச்சமில்லாமல் குளிக்கிறார். அப்போது, மெல்ல அருகே வரும் ஒரு முதலை தீடீரென வாயைத் திறந்து அந்த நபரின் தோல்பட்டையை கடித்து சுவைக்க முயற்சிக்கிறது. பயத்தில் நடுங்கிப்போன அந்த நபர், அந்த முதலையை அழுத்திவிட்டு நொடியில் தண்ணீரில் இருந்து மேலே ஏறி தப்புகிறார்.
இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் பலரும் எதற்கு முதலையுடன் குளிக்க வேண்டும் இப்படி பயந்து நடுங்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.