சொந்த கிராமத்தை விட்டு தாண்டாத தனது தாய்-தந்தையரை விமானம் மூலம் சிங்கப்பூர் அழைத்துச் சென்று சுற்றி காட்டியுள்ளார் தத்தாத்ரே ஜெ. இவர் சிங்கப்பூரில் பணிபுரிகிறார்.
இவரின் தாயும்-தந்தையும் இந்தியாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசிக்கின்றனர். இந்தநிலையில் தனது தாயையும் தந்தையையும் விமானத்தில் சிங்கப்பூர் அழைத்துச் சென்றுள்ளார் தத்தாத்ரே.
இவரின் இந்தச் செயல் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக இவர் தனது லிங்க்டின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இந்தப் பதிவை கிட்டத்தட்ட 3.37 லட்சம் பேர் விருப்பம் (லைக்) தெரிவித்துள்ளனர். அந்தப் பதிவில் தனது தாயார் மஞ்சள் புடைவை அணிந்திருப்பார்.
மேலும், தாத்தாத்ரேயின் பெற்றோர், “தாங்கள் விமானத்தை அருகில் இருந்து கூட பார்க்கவில்லை” என்றனர். இதற்கிடையில் வருங்காலத்தில் தாம் ஐரோப்பாவில் பணிபுரிந்தால் தமது தாய்-தந்தையை அங்கு சென்று சுற்றி காட்ட வேண்டுவதே தமது விருப்பம் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/