பெங்களூருவில் பண மழை பொழிந்த கடிகார மனிதன்; பணத்தை அள்ள முண்டியடித்த மக்கள் கூட்டம் - Man throws currency notes from Bengaluru flyover like Money rain | Indian Express Tamil

பெங்களூருவில் திடீர் பண மழை; முண்டியடித்த மக்கள் கூட்டம்; பணத்தை வீசிய கடிகார மனிதன்!

பெங்களூரு நகரத்தின் முக்கிய சாலையில், தீடீரென பண மழை போல வானத்தில் இருந்து பணம் கொட்டியதால் அதை எடுக்க மக்கள் முண்டியடித்த சம்பவம் நடந்துள்ளது.

Bengaluru, Bengaluru news, Bengaluru Man, Bengaluru man throws notes, பெங்களூருவில் பண மழை பொழிந்த கடிகார மனிதன், பணத்தை அள்ள முண்டியடித்த மக்கள் கூட்டம், Man throws currency notes from Bengaluru flyover like Money rainman throws currency notes, currency notes Bengaluru flyover, Bengaluru man police action, Bengaluru police, indian express, news

பெங்களூரு நகரத்தின் முக்கிய சாலையில், தீடீரென பண மழை போல வானத்தில் இருந்து பணம் கொட்டியதால் அதை எடுக்க மக்கள் முண்டியடித்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு கே.ஆர். மார்க்கெட் முக்கிய சாலையில் தீடீரென வானத்தில் பணம் மழை போல கொட்டியதால் அங்கே இருந்த மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

பெங்களூருவில் கே.ஆர். மார்க்கெட் பகுதியில் உள்ள முக்கிய சாலையில் திடீரென வானத்தில் இருந்து பணம் கொட்டியதைப் பார்த்த அங்கே இருண்த சிலர் கீழே கொட்டிய பணத்தை கிடைத்த வரைக்கும் லாபம் என்று அள்ளிச்சென்றனர். பலரும் கீழே சிதறி கிடந்த பணத்தை எடுக்க முண்டியடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பணம் வானத்தில் இருந்து கீழே கொட்டும்போது, ஆரம்பத்தில், சிலர் இவை போலி ரூபாய் நோட்டாக இருக்கும் என்று நினைத்தனர். எல்லாமே ஒரிஜினல் ரூபாய் நோட்டு என்பதை அறிந்ததும், ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்கு மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.

எல்லோரும் பண மழைதான் பெய்கிறது என்று நினைத்தாலும் உண்மையில் அது பணமழை அல்ல. பெங்களூரு கே.ஆர் மார்க்கெட் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் மீது அடையாளம் தெரியாத நபர், மூட்டையில் இருந்து ரூபாய் நோட்டுகளை வீசியுள்ளார். அது பாலத்தின் கீழே இருந்தவர்களுக்கு பண மழையாக அமைந்துவிட்டது. பாலத்தின் கீழே இருந்தவர்கள் கிடைத்த பணத்தை அள்ளிச்சென்றனர்.

இந்த பணமழைக்கு காரணம், கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் உள்ள மேம்பாலத்தில், அடையாளம் தெரியாத கோட் அணிந்த நபர் ஒருவர் தனது பைக்கை நிறுத்திவிட்டு பையில் இருந்து ரூபாய் நோட்டுகளை வீசியதுதான் காரணம். கழுத்தில் கடிகாரம் அணிந்திருந்த அந்த நபரின் இந்த செயல் வித்தியாசமாகவும் வியப்பாகவும் அமைந்துள்ளது.

மேம்பாலத்தின் மீது இருந்து பணத்தை அள்ளி வீசி பணமழை பொழிந்த அந்த நபரின் பெயர் அருண் என்றும் அவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Man throws currency notes from bengaluru flyover like money rain