பாம்பு வகைகளில் மிகவும் பெரியதான அனகொண்டா பாம்பை ஒருவர் படகில் இருந்துகொண்டு அஞ்சாமல் அசால்ட்டாக வெறும் கைகளில் பிடிக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், ஒருவர் அனகொண்டா பாம்பை வெறும் கைகளில் அசால்ட்டாக பிடிக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 2014-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. இந்த வீடியோ இதற்கு முன்பு சமூக ஊடகங்களில் பலமுறை பகிரப்பட்டு வைரலாகி இருந்தாலும் தற்போது மீண்டும் வைரலாகி உள்ளது. இந்த வீடியோ எத்தனை முறைப் பார்த்தாலும் பதைபதைப்பை உருவாக்கும்படி இருக்கிறது.
தென் அமெரிக்க நாடுகளில் வாழும் அனகொண்டா பாம்புகள் பற்றி அனகொண்டா என்ற படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்துக்கு கிடைத்த வெற்றியால் அனகொண்டா சீக்வெல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றன. அனகொண்டா படம்தான் உலகம் முழுவதும் பெரிய அளவில் அனகொண்டா பாம்புகளைப் பற்றி தெரிவித்து அச்சத்தை ஏற்படுத்தியது என்று கூறலாம்.
தென் அமெரிக்க நாடுகளான பிரேசில் போன்ற நாடுகளில் வாழும் அனகொண்டா பாம்பு வகைகளிலேயே மிகப்பெரிய உருவம் கொண்டது. இது பார்ப்பவர்களை மிரளவைக்கும்படி இருக்கும்.
அனகொண்டா பாம்பை ஒருவர் வெறும் கையில் பிடித்த சம்பவத்தின் வீடியோ 2014-ம் ஆண்டு வெளியாகி அவ்வப்போது மீண்டும் மீண்டும் வைரலான இந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பிரேசிலில் எடுக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் உள்ள சண்டா மரியா என்னும் ஆற்றில் சிர்லேய் ஒலிவ்ரியா என்ற பெண் அவரது கணவர் பெட்டினோ போர்க்ஸ், நண்பர் ரோட்ரிகோ சான்டோஸ் ஆகியோர் படகில் சென்றுள்ளனர். அப்போது சுமார் 17 அடி நீளமுள்ள அனகொண்டா பாம்பை பார்த்திருக்கிறார்கள்.
பாம்பைப் பார்த்ததும் பெட்டினோ போர்க்ஸ் அதன் வாலைப் பிடித்து இழுத்துள்ளார். ஆனால், அந்த பாம்பு அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக வேகமாக திமிறியதால் அவர்களுடைய படகு தடுமாறி அலைந்துள்ளது. இதனால், படகு கவிழ்ந்துவிடுமோ என்று பயந்த ஒலிவ்ரியா அதை விட்டுவிடுங்கள் என்று கத்துகிறார். இறுதியில் அந்த அனகொண்டா பாம்பு அவருடைய கையில் இருந்து தப்பிச் சென்றது.
இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் காணப்படும் அனகொண்டா பாம்பு மஞ்சள் நிறமுள்ள நீரில் வாழும் அனகொண்டா பாம்பு ஆகும்.
இந்த வீடியோ வெளியான பிறகு, அப்போதே பிரேசில் அரசு, இந்த பாம்பை பிடிக்க முயன்றவர்களுக்கு தலா 600 டாலர் அபராதம் விதித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"