புக்கட் தீவில் தனது வெக்கேஷனைக் கொண்டாடிவரும் நடிகை மந்திராபேடி ஹோட்டல் மாடியில் உடல் பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
பிரபல இந்தி நடிகை மந்திரா பேடி தமிழில் சிம்பு நடித்த மன்மதன் படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அண்மையில் வெளியான சாஹோ படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து மந்திரா பேடி நடிகர் ஜி.வி.பிரகாஷுடன் நடித்துள்ள அடங்காதே படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மந்திரா பேடி நடிகையாக மட்டுமில்லாமல் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருந்தார். இவர் இயக்குனர் ராஜ் கவுசலை காதலித்து 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
மந்திரா பேடிக்கு தற்போத் 47 வயதாகிறது என்றாலும் அவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இணையத்தை தெறிக்க விடுவார். மந்திரா பேடி தற்போது தனது ஓய்வுநாளைக் கழிக்க புக்கெட் தீவுக்கு சென்று மகிழ்ச்சியாக கொண்டாடிவருகிறார்.
புக்கட் தீவில் மந்திரா பேடி தங்கியுள்ள ஹோட்டல் மாடியில் இன்று காலை அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் மந்திரா பேடி குறைவான ஆடையை அணிந்து உடற்பயிற்சி செய்கிறார்.
இந்த வீடியோவைத் தொடர்ந்து, மந்திரா பேடி பிகினி உடையில் மிகவும் கவர்ச்சியான ஒரு புகைபடத்தை பதிவிட்டுள்ளார். மந்திரா பேடியின் இந்த கவர்ச்சியான வீடியோவும் புகைப்படமும் இன்ஸ்டாகிராமிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது. இந்த புகைப்படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் ரசிகர்கள் பலரும் ‘இந்த வயசுலயும் இப்படி உடற்பயிற்சி செய்றீங்களே… கிரேட் என்று கூறி பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சிலர், அவர் 47 வயதிலும் தனது உடலை உடற்பயிற்சி மூலம் ஃபிட்டாக வைத்திருப்பதைப் பார்த்து மந்திராபேடியா இது? நம்பவே முடியவில்லை என்று கூறி ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.