கர்நாடக மாநிலம், மங்களூருவில் உள்ள கடீல் துர்கா பரமேஸ்வரி கோயில் யானை குழந்தைகளுடன் கால்பந்து விளையாடுகிற வீடியொ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்ல, கோயில் யானை கோயிலில் மணி அடித்து வியக்க வைக்கிறது.
யானைகளின் வேடிக்கை விளையாட்டுகள் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கும். யானைகளின் விளையாட்டுத்தனமான இயல்பைக் காட்டும் வேடிக்கையான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது. தற்போது மகாலட்சுமி என்ற 33 வயது யானையின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்களை மகிழ்விக்கும் இந்த யானை கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள கடீல் துர்கா பரமேஸ்வரி கோயிலில் குழந்தைகளுடன் கால்பந்து விளையாடுகிறது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், யானை அதன் பயிற்சியாளர்களுடன் விளையாடுவதைக் காட்டுகிறது. தும்பிக்கையில் ஒரு குச்சியைப் பிடித்துக்கொண்டு சரியாக பந்தை அடித்து கிரிக்கெட் விளையாடுகிறது. குழந்தைகளுடன் கால் பந்து விளையாடும்போது காலால் பந்தை உதைத்து கால்பந்து விளையாடுகிறது. கோய்லில் மணி அடிக்கிறது. யானையிடம் மக்கள் பயபக்தியுடன் ஆசீர்வாதம் பெற வருகிறார்கள். யானையும் தும்பிக்கையில் ஆசீர்வாதம் செய்கிறது.
“தென்னிந்தியாவின் மங்களூரு நகரில் கால்பந்து விளையாடும் 33 வயது யானை நகரின் பேசுபொருளாக மாறியுள்ளது” என்று வீடியோவில் ட்விட்டர் பயனர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.
ஒடிசா டிவி யூடியூப்பில் பகிர்ந்துள்ள ஏ.என்.ஐ செய்தி நிறுவன வீடியோவில், யானைக்கு எட்டு மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டதாக பயிற்சியாளர் ஒருவர் இந்தியில் கூறியது கேட்கப்படுகிறது. யானை மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாக கோயிலுக்கு வந்த பார்வையாளர் கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், “இது குழந்தைகளுடன் கால்பந்து, கிரிக்கெட் விளையாடுகிறது. இங்குள்ள பயிற்சியாளர்கள் அதை சிறப்பாகப் பயிற்றுவிக்கிறார்கள். அவர்கள் இங்கு இருப்பதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இங்குள்ள யானையைப் பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று கூறுகிறார்.
இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கலவையான பதில்களை அளித்துள்ளனர். சிலர் அதை மகிழ்ச்சியாகப் பார்த்தாலும் இன்னும் சிலர் விலங்குக் கொடுமை பற்றிய கருத்துக்களை எழுப்பினர். ஒரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த யானை எப்படி இதைச் செய்யப் பயிற்றுவிக்கப்பட்டது என்பதற்கான முழு செயல்முறையையும் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறுகிறார். மற்றொரு பயனர் எழுதினார், ரொம்ப அழகாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”