New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/03/xiomi-2.jpg)
break dance video
தூர்தர்ஷன் தொலைக்காட்சி தீம் பாடலின் ஒவ்வொரு பீட்டுக்கு உடலை வளைத்து நெளித்து பிரேக் டான்ஸ்
break dance video
இப்படியொரு பிரேக் டான்ஸா? யாருப்பா நீ? இந்த வீடியோவை பார்த்த அனைவரும் கேட்கும் முதல் கேள்வி இதுதான். கடந்த 2 நாட்களாக இணையத்தையே புரட்டி போட்டுக் கொண்டிருக்கிறது ஒரு இளைஞரின் வீடியோ. இதோ அந்த வீடியோ.
Doordarshan would not hv imagined this in their wildest dreams !! ???? pic.twitter.com/epJ86aVssE
— (•ิ_•ิ) Silk (@Ya5Ne) 4 March 2019
சமீபகாலமாக டிக்-டாக் செயலி மிகப்பெரிய அளவில் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் திரைப்பட பாடல்களுக்கு ரகரகமான நடனங்கள் ஆடுவதும், பஞ்ச் டயலாக்குகளில் தெறிக்கவிடுவதும் என இதனை பயன்படுத்தியவர்கள் செய்துகாண்பிக்கிறார்கள்.
ஒருபுறம் இந்த டிக்-டாக் செயலிக்கு எதிர்ப்பு கிளம்பிவரும் நிலையில், இதற்கு ஆதரவான குரல்களும் ஆங்காங்கே எழத்தான் செய்கின்றன.
அப்படி சிலர் செய்யும் வீடியோக்கள் க்யூட்டாகவும் மற்றவரை கவரும் வகையில் இருப்பின் அது அதிக விரைவில் பகிரப்பட்டு வைரலாகவும் செய்கிறது.
அதேபோல் வைஷாக் என்னும் இளைஞர் தூர்தர்ஷன் தொலைக்காட்சி தீம் பாடலின் ஒவ்வொரு பீட்டுக்கு உடலை வளைத்து நெளித்து பிரேக் நடனம் (Break dance) ஆடி அசத்தியுள்ளார்.மேலும் அதனை ட்விட்டரில் @Ya5Ne என்னும் யூசர் ஐடியில் பதிவேற்றம் செய்துள்ளார். அது தற்போது இணையத்தில் அதிக அளவில் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும்வருகிறது.
இதுவரை இந்த வீடியோவை 2 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்கள் பார்த்து, ரசித்து, லைக் செய்து, ஷேரும் செய்து வருகின்றனர். நீங்க எப்படி? ஷேரா? லைக்கா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.