இப்படியொரு கல்யாண பத்திரிக்கையா? மோடிக்காக ரூம் போட்டு யோசிச்சிருகாங்க!

மணமக்களின் ஐடியா இருக்கே அது வெற லெவல்

கல்யாண பத்திரிக்கை
கல்யாண பத்திரிக்கை

குஜராத்தில் நடைப்பெற்ற திருமணம் ஒன்றிற்காக மணமக்கள் வீட்டார் அச்சடித்திருந்த கல்யாண பத்திரிக்கை இணையதளத்தில் படு வைரல்.

கல்யாண பத்திரிக்கை:

பொதுவாகவே திருமணம் என்றால் அதில் திருமண அழைப்பிதழுக்கு முக்கிய பங்கு உண்டு. காதல் திருமணம், நண்பர்களாக இருந்து காதலாக மாறியவர்கள், அரேஞ் மெரேஜ் என தங்களது திருமண தகவலை விதவிதமான வசனங்களுடன் இன்றைய இளைஞர்கள் திருமண அழைப்பிதழ்களில் அச்சடித்து வருகின்றன.

ஆனால், இப்படியொரு கோரிக்கையுடன் ஒரு வித்யாசமான திருமண அழைப்பிதழை நீங்கள் வேறு எங்கும் பார்த்ததுண்டா? திருமணத்திற்கு வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மணமக்கள் வைத்திருக்கும் அன்பான அதிரடி கோரிக்கை 2019 நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு ஓட்டு போட வேண்டும் என்பது தான்.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக, காங்கிரஸ், பிற கட்சிகளும் தயாராகி வருகின்றனர். இதற்காக சிலர் இப்போதே பிரசாரத்தையும் தொடங்கிவிட்டனர். இந்த நேரத்தில் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஜெய்சிங்கானி குடும்பத்தினர் வீட்டு திருமண அழைப்பிதழில் இப்படியொரு வித்தியாசமான கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் மோடிக்காக.

திருமணத்திற்கு வருபவர்கள் கிஃப்ட் கொண்டு வர வேண்டாம், பிளாஸ்டிக் பொருட்களை தவிருங்கள், ஏன் மொய் பணம் கூட வேண்டாம் என வித்யாசமான வாசகங்களை அழைப்பிதழில் படித்திருப்போம். ஆனால் 2019-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மோடிக்கு வாக்களிக்க வேண்டும். அதுதான் புதுமணத் தம்பதிக்கு கொடுக்கும் பரிசாக இருக்க முடியும் என ஜெய்சிங்கானி வீட்டு திருமண பத்திரிகையில் கூறியிருப்பது ஆச்சரியமான ஒன்று.

இந்த திருமண அழைப்பிதழ் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதைப் பார்த்த நெட்டிசன்கள் “இதில் என்ன சந்தேகம் மணமக்கள் வீட்டார் பாஜக – வை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதனால் தான் திருமண அழைப்பிதழில் மோடிக்கு ஓட்டு கேட்டு இருக்கார்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

”என்ன நோக்கம் வேண்டுமானாலும் இருந்துட்டு போகட்டும்.. ஆனால் மணமக்களின் ஐடியா இருக்கே அது வெற லெவல் தான்”

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Marriage invitation election propaganda messages

Next Story
விரலை தத்ரூபமாக வெட்டி ஒட்டும் மாயாஜாலம்! சக்கைபோடு போடும் வீடியோ!!!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com