மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அதிர்ச்சி

கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7ம் படை வீடு என அழைக்கப்படுகிறது.

கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7ம் படை வீடு என அழைக்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
வழியில் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அதிர்ச்சி

சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அதிர்ச்சி

கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7ம் படை வீடுஎன அழைக்கப்படுகிறது.

Advertisment

மருதமலை முருகன் கோவில் இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். முக்கிய விழா நாட்கள், விஷேச தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

தற்போது மலைக்கோவில் பகுதியில் லிப்ட் அமைப்பது, தார்சாலை அமைப்பது உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மலைப்பாதையில் வாகனங்கள் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவிலுக்கு செல்பவர்கள் படிப்பாதை வழியாக கோவிலுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் படிப்பாதை வழியாக கோவிலுக்க சென்று வருகின்றனர். இந்த நிலையில், கோவிலுக்கு செல்லும் படிப்பாதையில், உள்ள தான்தோன்றி விநாயகர் கோவில் பகுதியில் சிறுத்தை ஒன்று இரவு நேரத்தில்  நடமாடியுள்ளது.இந்த காட்சிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில், பதிவாகி உள்ளது.

Advertisment
Advertisements

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. படிப்பாதை வழியாக மட்டுமே கோவிலுக்கு செல்லும் நிலையில் சிறுத்தை நடமாட்டம் பற்றிய தகவல் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.எனவே கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“

TAMILNEWS

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: