ஆறுமுறை குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்சியில் அமெரிக்காவின் ராக் இசைக்குழுவின் ஃபோர் நான் ப்ளோண்ட்ஸ் வாட்ஸ் அப் பாடலைப் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.
இளம் தலைவர்கள் இணைப்பு ஏழாம் ஆண்டு நிகழ்ச்சியின் ஒரு பகுதி டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்தான் 6 முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் ஒரு வீடியோவை அமெரிக்க ராக் இசைக்குழு ஃபோர் நான் ப்ளோண்ட்ஸ் வழங்கிய வாட்ஸ் அப் பாடலை பாடியுள்ளார். இந்த நிகழ்வை நார்த் ஈஸ்ட் டிஜிட்டல் நியூஸ் தளமான ஈஸ்ட் மொஜோ மேரி கோம் பாடிய வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்பட பலரின் பாராட்டுகளைப் பெற்று நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.
மேரி கோம் பாடலை பலரும் பாராட்டினாலும் அவரை குத்துச்சண்டை கிளவுஸ் இல்லாமல் எளிதில் அடையாளம் காண முடியவில்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
‘மேட் இன் நார்த் ஈஸ்ட்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட இளம் தலைவர்கள் இணைப்பு என்ற இந்த ஆண்டு மாநாட்டிற்கு மத்திய வெளியுறவு மந்திரி கிரேன் ரிஜிஜு தலைமை தாங்கினார். மேலும், மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா, முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் பைச்சுங் பூட்டியா ஆகியோரும் இணைந்து தலைமை வகித்தனர்.