மேயருக்கு கொடுக்கப்பட்ட அரசு வாகனத்தில் ஆவடி மேயர் குடும்பத்தினர் துணிக்கடைக்கு சென்று ஷாப்பிங் செய்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி மாநகராட்சி மேயராக தி.மு.க-வைச் சேர்ந்த உதயகுமார் பதவி வகித்து வருகிறார். உதயகுமாரின் குடும்பத்தினர் திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் துணிக்கடைக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் துணிக்கடைக்கு ஷாப்பிங் செல்ல மேயருக்கு வழங்கப்பட்ட அரசு வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர். மேயர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு உள்ளே சென்று அவர்கள் ஷாப்பிங் செய்ததாக வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வ்ருகிறது.
மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அரசு வாகனங்களை குடும்பத்தினரின் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது மோசடியானது, விதிமுறை மீறல் என்று நெட்டிசன்கள் பலரும் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"