நானா? இல்ல, இந்த ஆட்டுக்கறியா? மனைவிக்கு செக் வைத்த “சைவ” கணவர்

திருமண பந்தத்திற்குள் வரும் போது கணவருக்காக விட்டுக் கொடுப்பதா அல்லது மனைவிக்காக விட்டுக் கொடுப்பதா என்பதில் பெரிய இடியாப்ப சிக்கலே வந்துவிடுகிறது.

Me or Mutton Vegetarian husband asks wife to choose : எது சிறந்த உணவு? எது சுவையான உணவு? எது ஆரோக்கியமான உணவு? சைவமா அல்லது அசைவமா என்ற கேள்வி இன்று தொடங்கி அல்ல நெடுங்காலமாக இருந்து வருகிறது. இந்த கேள்விக்கு பதிலும் இல்லை தான். அடுத்தவர் எதை உண்ண வேண்டும் என்பதை நாம் எப்படி முடிவு செய்ய முடியும். அசைவம் சாப்பிட்டும் நண்பர்கள், சைவம் மட்டுமே சாப்பிடும் உடன் பிறந்தோர், முட்டை மட்டும் போதும் என்னும் சைவ பட்சிகள் அனைவரையும் நாம் கடந்திருப்போம். ஆனால் திருமண பந்தத்திற்குள் வரும் போது கணவருக்காக விட்டுக் கொடுப்பதா அல்லது மனைவிக்காக விட்டுக் கொடுப்பதா என்பதில் பெரிய இடியாப்ப சிக்கலே வந்துவிடுகிறது.

சமூக வலைதங்களில் வெளியான ஒரு நியூஸ் பேப்பர் கட்டிங் தற்போது வைரலாக பரவி வருகிறது. தான் திருமணம் செய்து கொள்ளப் போகின்ற பெண் அடிக்கடி வெளியே அசைவம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்று தெரிந்த மணமகன் அவரிடம் ஒரு சத்தியம் வாங்கியுள்ளார். திருமணத்திற்கு பிறகு அசைவம் சாப்பிட கூடாது என்று. பெண்ணும் சத்தியம் செய்து கொடுக்க திருமணமும் முடிந்து விட்டது. ஆனால் அதன் பின்னரும் ரகசியமாக தனக்கு பிடித்த உணவை உட்கொண்டு வந்துள்ளார். இதனை அறிந்து ரத்த கொதிப்பிற்கு ஆளான கணவர் நானா அல்லது இந்த மட்டனா இரண்டில் ஏதாவது ஒன்றைத் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த இந்த பதிவிற்கு பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

பத்திரிக்கைக்கு இதனை எழுதிய கணவர் தன் மனைவி மட்டன் தான் முக்கியம் என்று சென்றுவிடுவாரோ என்ற பயம் இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள காலம்னிஸ்ட், வாழ்க்கையில் ஆண் – பெண் – ஆடு என்ற முக்கோண காதல் கதையை முதன்முறையாக கேட்கின்றேன் என்று கூறிப்பிட்டுள்ளார்.

இரண்டு பேரும் சமாதானமாகி ஏன் சிக்கன் சாப்பிடக் கூடாது என்பது போன்ற தத்துவார்த்த கருத்துகளும் அதில் பதிவாகியுள்ளது. இது போன்ற சூழலை நீங்கள் எதிர்கொண்டால் என்ன செய்வீர்கள்? உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Me or mutton vegetarian husband asks wife to choose after realising she is secretly eating meat

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express