நித்யானந்தா அனுப்பிய புத்தகம்; மீரா மிதுன் வீடியோ விளக்கம்

பிக்பாஸ் சீசன் 3 புகழ் நடிகை மீரா மிதுன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புத்தகத்தைக் காட்டி இது அற்புதமான புத்தகம். இதை எல்லோரும் படிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். அந்த புத்தகத்தை நித்யானந்தா அனுப்பியதாகவும் மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

By: Updated: March 14, 2020, 08:17:22 PM

பிக்பாஸ் சீசன் 3 புகழ் நடிகை மீரா மிதுன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புத்தகத்தைக் காட்டி இது அற்புதமான புத்தகம். இதை எல்லோரும் படிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். அந்த புத்தகத்தை நித்யானந்தா அனுப்பியதாகவும் மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக மீரா மிது கலந்துகொண்டார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி விதிகளின் படி வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீரா மிதுனின் செயல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிகழ்ச்சி முடிந்த பிறகு, சில செல்போன் ஆடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

View this post on Instagram

 

At the end of the day, I’M AT PEACE, because my intentions are good and my heart is pure ????✨????

A post shared by Meera Mitun (@meeramitun) on


சர்ச்சை சாமியார் நித்யானந்தா குஜராத்தில் அவரது ஆசிரமத்தில் குழந்தைகள் சட்டவிரோதமாக கடத்தி அடைத்துவைக்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அம்மாநில போலீசாரால் தேடப்பட்டுவருகிறார். அவர் மீது பாலியல் வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனால், தலைமறைவான நித்யானந்தா கைலாசா என தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி அவர் அவ்வப்போது வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், சர்ச்சைகளுடன் வலம் வரும் மீரா மிதுன் சில வாரங்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில், தனக்கு நித்யானந்தாவிடம் இருந்து அழைப்பு வந்தால் நிச்சயம் செல்வேன் என கூறியுள்ளார். அவரிடம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. அவரிடம் இருந்து எனக்கு கைலாசா வருவதற்கு அழைப்பு வந்தால் உடனே அவரிடம் சென்றுவிடுவேன் என கூறினார்.

இதனைத் தொடர்து, மீரா மிதுன் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நித்யானந்தா எழுதிய லிவிங் என்லைட்மெண்ட் என்ற புத்தகத்தைக் காட்டி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி உள்ளது.

மீரா மிதுன் “நான் இந்த அற்புதமான புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். நான் இந்த மாதிரி புத்தகங்களை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது நமக்கு உண்மையிலேயே தெரிய விஷயஙக்ளைப் பற்றி அதிகமான அறிவைத் தருகிறது. இந்த புத்தகம் உங்களுடன் பேசுகிறது. அதிக ஞானத்தை தருகிறது. படிப்பதற்கு சுவாரசியமான ஒரு புத்தகம். இது உண்மையிலேயே அற்புதமானது. நான் இதை நேசிக்கிறேன். இந்த லிவிங் என்லைட்மெண்ட் புத்தகம் எழுதியது பரமஹம்ச நிதியானந்தா. நான் இந்த மாதிரி புத்தகத்தை நாம் படிக்க வேண்டும். உண்மையில் இந்த புத்தகத்தை எங்களுக்கு, கடவுளின் தூதர், சாமியார் நித்யானந்தா அனுப்பினார். நான் இந்த புத்தகத்தை எல்லோருக்கும் பரிந்துரைக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

மீரா மிதுன் வெளியிட்டுள்ள நித்யானந்தா புத்தகத்தைப் பற்றிய வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Meera mitun rlease new nithyananda video goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X