இதுதாங்க சுத்தமான ஆறு; இந்தியாவுல தான் இருக்குது… யமுனைக்கு வந்த சோதனையப்பா இது!

நெட்டிசன்கள் இந்த ஆற்றை புகழவும், யமுனாவை முறையாக பராமரிக்காத அரசை கண்டிக்கவும் இதில் காரணங்கள் ஒன்றும் இல்லாமல் இல்லை.

Netizens Crystal Clear water

Meghalaya river crystal clear water goes viral: டெல்லி யமுனையில் தொடர்ந்து மாசுக்களால் நுரை பொங்கி சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் மேகாலயாவில் உள்ள ஆற்றின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில் உலகின் மிகவும் சுத்தமான நதிகளில் ஒன்று இந்தியாவில், மேகாலயாவின் ஷில்லாங்கில் இருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள உம்ங்கோட் நதி என்று குறிப்பிட்டிருந்தது. அனைத்து நதிகளும் இது போன்று தூய்மையாக இருக்க வேண்டும். இந்த நதியை தூய்மையாக வைத்திருக்கும் மேகாலயா மக்களிடம் தலை வணங்குகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சகம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் நதி மிகவும் சுத்தமாக உள்ளது. மேலும் நீருக்கு அடையே இருக்கும் கூழாங்கற்கள் கூட மிகவும் தெளிவாக தெரிகிறது. அதில் ஐந்து பேர் அமர்ந்து கொண்டிருக்க படகு ஒன்று அந்த ஆற்றில் பயணித்துச் செல்கிறது. இந்த புகைப்படத்தைக் கொண்டாட உண்மையிலேயே பல காரணங்கள் இருக்கின்றன. நெட்டிசன்கள் இந்த ஆற்றை புகழவும், யமுனாவை முறையாக பராமரிக்காத அரசை கண்டிக்கவும் இதில் காரணங்கள் ஒன்றும் இல்லாமல் இல்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Meghalaya river crystal clear water goes viral hailed as cleanest in the world

Next Story
உலகிலேயே அதிக எடை கொண்ட பெண்மணி… பேஸ்புக்கில் ராஜினாமா கடிதத்துடன் பதவி விலகிய டாக்டர்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com