ரீல்ஸுக்கு ஆசைப்பட்டு பீச்சில் ரைடு... மணலில் சிக்கிய மெர்சிடிஸ் கார்!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள துமாஸ் கடற்கரையில் 2 இளைஞர்கள் செய்த சாகச முயற்சி விபரீதத்தில் முடிந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள துமாஸ் கடற்கரையில் 2 இளைஞர்கள் செய்த சாகச முயற்சி விபரீதத்தில் முடிந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

author-image
WebDesk
New Update
Mercedes

கடற்கரையில் சாகசப் பயணம்: மணலில் சிக்கிய மெர்சிடிஸ் கார்!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள துமாஸ் கடற்கரையில் 2 இளைஞர்கள் செய்த சாகச முயற்சி விபரீதத்தில் முடிந்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் காரை கடற்கரைக்குள் ஓட்டிச் சென்றுள்ளனர். ஆனால், எதிர்பாராதவிதமாக கார் மணலில் ஆழமாகச் சிக்கிக் கொண்டது. இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Advertisment

வீடியோவில், மணலில் சிக்கிக் கொண்ட காரையும், அதை எப்படி வெளியே கொண்டு வருவது என்று தெரியாமல் இளைஞர்களும் அருகில் திகைத்து நிற்பதையும் காணலாம். இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின்படி, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக துமாஸ் கடற்கரை பகுதியில் வாகனங்கள் ஓட்ட கடுமையான தடை உள்ளது. ஆனால், இதை மீறி இளைஞர்கள் காரை உள்ளே கொண்டு சென்றுள்ளனர்.

கார் நீரின் ஓரத்தில் மிகவும் ஆபத்தான முறையில் நிறுத்தப்பட்டிருந்ததால், அலைகள் வந்து சென்றபோது மணலுக்குள் மேலும் புதைந்துவிட்டது. "துமாஸ் கடற்கரையில், ஒரு மெர்சிடிஸ் நீர்மூழ்கிக் கப்பல் போல் செயல்பட முடிவு செய்தது" என்று @kumarmanish9 என்ற X பயனர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

இப்பகுதியில் இதுபோல நடப்பது புதிதல்ல என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. "இப்போது அதிகமாக நடக்கின்றன. மக்கள் விதிகளைப் பொருட்படுத்துவதில்லை, அவர்களைத் தடுக்கவும் யாரும் இல்லை" என்று கடற்கரை வியாபாரி வேதனையுடன் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முன்னதாக 2021-ம் ஆண்டிலும், கோவாவின் மோர்ஜிம் கடற்கரையில் BMW கார் மணலில் சிக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் மணலில் வாகனத்தை ஓட்டிச் சென்று சிக்கிக் கொண்டதால், பின்னர் டிராக்டர் உதவியுடன் கார் வெளியே எடுக்கப்பட்டது. விதிமீறலில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: