Advertisment

"இந்தாண்டின் சிறந்த பக்கத்து வீட்டுக்காரர்" - டிரெண்டிங் ஆகும் வீடியோ

Trending video : நம்மூரில் உள்ள வீடுகளில் திண்ணை கட்டி வழிப்போக்கர்கள் அமர்ந்து செல்ல இடவசதி செய்துகொடுத்ததுபோன்று, அமெரிக்காவில் ஒருவர் தன் வீட்டின் முன்பகுதியில் குழந்தைகள் சைக்கிள் ஓட்டிப்பழக ரேஸ்டிராக் அமைத்துக்கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
mike sington, man draws racetrack for kid, kid viral video, CanyonChasers, YouTube, Youtube trending, indian express, indian express news

பக்கத்து வீட்டுக்காரர்களையே பயங்கரவாதிகளாக பார்க்கும் இந்த உலகத்தில், குழந்தைகள் சைக்கிள் ஓட்டிப்பழக, வீட்டு உரிமையாளர் ரேஸ்டிராக் அமைத்துக்கொடுத்துள்ள வீடியோ, சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisment

நம்மூரில் உள்ள வீடுகளில் திண்ணை கட்டி வழிப்போக்கர்கள் அமர்ந்து செல்ல இடவசதி செய்துகொடுத்ததுபோன்று, அமெரிக்காவில் ஒருவர் தன் வீட்டின் முன்பகுதியில் குழந்தைகள் சைக்கிள் ஓட்டிப்பழக ரேஸ்டிராக் அமைத்துக் கொடுத்துள்ளார்.

கேன்யான்சேசர்ஸ் என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள வீடியோ, சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகிவருகிறது. அமெரிக்காவில் உள்ள ஒருவர் திருட்டு பயத்திலிருந்து தப்பிக்க தனது வீட்டைச்சுற்றி சிசிடிவி கண்காணிப்பு கேமராவை பொருத்தி கண்காணித்து வந்துள்ளார். ஒருநாள் அந்த வீடியோவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, தன் வீட்டின் முன்பகுதியில் சிறுவர்கள் சைக்கிள் ஓட்டி பழகுவதை பார்த்துள்ளார். அவர்கள் அந்த இடத்தில் சிரமப்பட்டு திரும்புவதை பார்த்த அவர், அந்த இடத்தில் ரேஸ் டிராக்கை வரைந்து அவர்கள் சைக்கிள் ஓட்ட எளிதில் பழகும்வகையிலான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கின் காரணமாக எல்லோரும் வீட்டிலேயே முடங்கியுள்ள நேரத்தில் பெற்றோர்கள் அனுமதிக்கும் சிறிதுநேரத்திற்கு சைக்கிள் ஓட்டிப்பழகுகின்றனர். அவர்கள் தங்கள் வீட்டின் முன்பகுதியில் சைக்கிள் ஓட்டிப்பழகுவதை பார்த்த கேன்யான் சேசர்ஸ், மனைவியின் ஆலோசனையின் பேரில், ரேஸ்டிராக்கை வரைந்தததாக தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ, இதுவரை 82 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ, சமூகவலைதளங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தின் உயர் அதிகாரி மைக் சிங்டன், தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் தெரிவித்த கமெண்ட்களை இனி காண்போம்.

சாக்பீசால் ரேஸ் டிராக்கை அவர் வரையும் வீடியோ வைரலாகி உள்ளதோடு மட்டுமல்லாது டிரெண்டிங்கும் ஆகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - ‘Neighbour of the year’: Man draws racetrack for boy cycling on his driveway, wins praise online

Video Social Media Viral Trending Usa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment