தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன். இவர் சாத்தூர் தொகுதியில் ஆறு முறை, விளாத்திகுளத்தில் ஒரு முறை மற்றும் அருப்புக்கோட்டைத் தொகுதியில் இரண்டு முறை வெற்றிபெற்று, ஒன்பது முறை எல்.எல்.ஏ-வாக பதவி வகித்தவர். இப்போது ராமச்சந்திரன், ஆறாவது முறையாக அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விருதுநகர், பாலவனத்தம் கிராமத்துக்கு சென்றிருந்தார். அப்போது கலாவதி என்ற பெண் தனது தாய்க்கு முதியோர் தொகை வழங்க வேண்டும் என்று அமைச்சரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், அந்த பேப்பரால் கலாவதியின் தலையில் அடித்துள்ளார்.
அதை வாங்கிக் கொண்ட அமைச்சர் ராமச்சந்திரன், தன் கையிலிருந்த பேப்பரால் அந்த பெண்ணின் தலையில் அடித்தார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
சமீபத்தில், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த ஐ.எம்.கோஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், சட்டமன்ற தேர்தல் போட்டியிடவும், வத்திராயிருப்பு திமுக ஒன்றிய செயலாளர் பதவி பெற்றுத் தருவதாக கூறி திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ரூபாய் 32 லட்சம் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால், இதுவரை எந்த பதவியையும் பெற்றுத் தரவில்லை, பணத்தையும் திரும்ப தரவில்லை என புகார் மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது களங்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மனு கொடுக்க வந்த ஏழைப் பெண்மணியை பேப்பரால் அமைச்சர் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதில், மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த அமைச்சர் KKSSR ராமச்சந்திரன், அடுத்த 48 மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து கலாவதி விளக்கமளித்துள்ளார். அதில் அமைச்சர் தன்னை அடித்ததாலும், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சொன்னதாகவும், உனக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போகிறேன் என உரிமையோடு அவர் பேசியதாகவும், கலாவதி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“