திமுக நிகழ்வு ஒன்றில், உதயநிதியிடம் நெருங்கிச் சென்ற தொண்டர் ஒருவரை அமைச்சர் கே.என்.நேரு பிடித்து தள்ளிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் நடைபெற்ற திமுக நிக்ழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்நிலையில் இந்நிகழ்வில் கட்சி தொண்டர்கள், வரிசையில் நின்று, உதயநிதிக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் வரிசையில் நிற்பவர்களை உடன் இருக்கும் திமுகவினர் வேகமாக செல்லுமாறு தள்ளினர். இந்நிலையில் தொண்டர் ஒருவர் உதயநிதியை நெருங்கிச் சென்று கைகுலுக்க முயற்சித்த போது அமைச்சர் கே. என். நேரு அவரை பிடித்து தள்ளுகிறார்.
இந்நிலையில் இந்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “ திமுக அமைச்சர்கள் மக்களை தாக்க வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டுள்ளனர். இதுபோல சம்பவம் தினமும் நடைபெறும் நிகழ்வாக இருக்கிறது. தமிழக முதல்வர் எங்களை காப்பாற்ற பொருட்களை அனுப்ப வேண்டி இருக்கும். “என்று அவர் தெரிவித்துள்ளார்.