நாகர்கோவிலில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ், மின்னல் வேகத்தில் சிலம்பம் சுற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பேரறிஞர் அண்ணா 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விளையாட்டு மையங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிலம்ப கலையில் ஈடுபாடு உள்ளவர். விளையாட்டுப் போட்டிகளைத் தொட்ங்கி வைப்பதற்கு முன்னர், விளையாட்டு மைதானத்தில் சிலம்பம் சுற்றி பார்வையாளர்களுக்கு மாஸ் காட்டினார்.
அமைச்ச மனோ தங்கராஜ் ஒரு சிலம்பம் கலை வீரர் போல, மின்னல் வேகத்தில் சிலம்பம் சுற்றியதைப் பார்த்த பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், காவல்துறை அதிகாரிகள், இளைஞர்கள் என பலருக்கும் உற்சாகத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது.
அமைச்சர் மனோ தங்கராஜ், ஒரு தொழில்முறை சிலம்ப விளையாட்டு வீரர் போல, மின்னல் வேகத்தில் சிலம்பம் சுற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“