ஆவடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பால்வளத் துறை அமைச்சர் நாசர் சென்றுகொண்டிருந்த போது, ஒரு பசு விபத்தில் சிக்கி உயிருக்கு போரடிக் கொண்டிப்பதை அறிந்த அமைச்சர் நாசர், 2 மணி நேரம் போராடி பசுவைக் காப்பாற்றிய சம்பவ வீடியோ வைரலாகி வருகிறது.
ஆவடி மற்றும் திருமுல்லைவாயில் சுற்றுவட்டாரப் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக பால் வளத்துறை அமைச்சர் நாசர் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகே பசுமாடு ஒன்று சாலை விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதை அறிந்த அமைச்சர் நாசர், காரை நிறுத்தச் சொல்லி அருகே சென்று பார்த்தார். பசுவுக்கு காயம் ஏற்பட்டிருப்பதைப் பார்த்த அமைச்சர் நாசர், உடனடியாக கால்நடை மருத்துவர்களை வரவழைத்து, முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். பசுவின் உடல்நிலையில், முன்னேற்றம் காணப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக பசுவை, அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தில் ஏற்றி, வேப்பேரி காவல்நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் சிக்கி துடித்துக்கொண்டிருந்த பசுவைக் காப்பாற்ற வேண்டும் என அமைச்சர் நாசர் செயல்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பால்வளத்துறை அமைச்சர் நாசர், பசுவைக் காப்பாற்ற 2 மணி நேரமாக போராடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“