கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்களை உதாசினப்படுத்திய குமாரசாமி சகோதரர் அமைச்சர் ரெவண்ணா வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
வெள்ளத்தில் மீட்கப்பட்ட மக்களை உதாசினப்படுத்தும் குமாரசாமி சகோதரர் :
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் சோமவார்பேட், சண்டிக்கொப்பா, முக்கொட்லு, மடாப்பூர், ஹராங்கி, குஷால்நகர் மற்றும் சிதாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்களை மீட்பு படையினர் மீட்டு, முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
மீட்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற கர்நாடக மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஹெச்.டி. ரெவண்ணா, அவர்களை துச்சமாக நினைப்பது போல் பிஸ்கட் பேக்கெட்டுகளை தூக்கி வீசினார். அவரின் இந்த செயல் மனித நேயமற்ற செயலாக உள்ளது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.