இந்த வருடம் நம்மையெல்லாம் வீட்டிலேயே முடங்க வைத்ததன் பெருமை கொரொனாவை சாரும் என்றால், ஓரளவுக்கு சளிப்படையாமல் நம்மை கொண்டு சென்றது ஆன்லைன் கேம்களும், ஓ.டி.டி தளங்களும் தான். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைப் பகுதியில் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க எல்லாம் தலைகீழாய் மாறியது. ஹலோ,டிக்டாக், பப்ஜி என அனைத்து சீன தயாரிப்புகளும் அடியோடு காலியானது.
PlayerUnknown’s Battlegrounds என்று கூறப்படும் பப்ஜி விளையாட்டின் தடையால் என்னவோ இளைஞர்கள் கொஞ்சம் சோகம் அடைந்தது உண்மை தான். ஆனால் அதே கேமை நேரில் விளையாடினால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை வடிவம் கொடுத்து அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளது ஸ்மிலோ என்ற முகநூல் பக்கம்.
மேலும் படிக்க : ”கோ கொரோனா” சென்று, இப்போது ”நோ கொரோனா” – மத்திய அமைச்சரின் புது முழக்கம்
இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே அதற்கு கிடைத்த வரவேற்பு தான் ஹைலைட். பப்ஜியை மிஸ் செய்த அத்தனை உள்ளங்களும் அதனை வரவேற்று தங்களின் லைக்குகளையும், கமெண்ட்களையும், ஷேர்களையும் அள்ளி தெளித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil