New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/01/exercise-stalin.jpg)
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேல்சட்டை இல்லாமல் உடற்பயிற்சி கூடத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 69 வயதிலும் ஃபிடனஸ் உடன் இருக்கும் ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் உள்ளவர். மாநிலத்தின் முதல்வராக கடும் பணிச்சுமைகளுக்கு இடையேயேயும் நடைபயிற்சி, உடற்பயிற்சிக்கு என நேரம் ஒதுக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறார்.
மு.க. ஸ்டாலின் தினமும் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நேரத்தில்கூட ஈ.சி.ஆர் சாலையில் சைக்கிளிங் சென்றார். அப்போது, அவரைப் பார்த்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.
சில வாரங்களுக்கு முன்பு கூட, மு.க. ஸ்டாலின் காலையில் ஐ.ஐ.டி வளாகத்தில் நடைபயிற்சி சென்றபோது, அங்கே இருந்த பொதுமக்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அப்போது அவருடைய கையில் ஒரு மருத்துவக் குச்சி வைத்திருந்ததும் பேசப்பட்டது.
அவ்வப்பது, மு.க. ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது. முன்னதாக், முதல்வர் ஸ்டாலின் டீ ஷர்ட் அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்த வீடியோ வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மேல் சட்டை அணியாமல் உடற்பயிற்சி செய்கிற புதியதாக ஒரு வீடியோ வெளியாகி கவர்ந்துள்ளது. அந்த வீடியோஅவரது முகம் காட்டப்படாமல் முதுகு பக்கம் மட்டும் தெரியும்படி வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், ஜிம்மில் மு.க. ஸ்டாலின் கடுமையான உடற்பயிற்சியையும் சாதாரணமாக இயல்பாக செய்கிறார். வீடியோவில் மு.க. ஸ்டாலினின் ஃபிட்னஸைப் பார்த்து தொண்டர்கள், நெட்டிசன்கள் பலரும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
69 வயதாகும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் கடுமையான உடற்பயிற்சியையும் ஃபிட்னஸையும் பார்ப்பவர்கள் அனைவருக்கும் உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஊக்கம் அளித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.