தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் ஆடை தேர்வு அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்க காரணம் இல்லாமல் ஒன்றும் இல்லை. மற்ற தலைவர்களைப் போல் எந்த நேரமும் வெள்ளை வேட்டி சட்டையுடன் செல்வதில்லை. மேலும் உடற்பயிற்சி, சைக்கிள் பயிற்சியில் அதற்கேற்றவாறு உடை அணிந்தும், மக்களுடனான சந்திப்பின் போது பேண்ட்-ஷர்ட் என்று செம்ம ஸ்டைலான அதே நேரத்தில் எளிதில் அணுகக் கூடிய தோற்றத்தைக் கொண்டவராகும் தன்னை எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
Advertisment
மேலே கூறிய உடைகளோடு பார்க்கும் போதே, எளிமையான மக்கள் தலைவராகவே அவர் இருக்கிறார் என்று தோன்றும். ஆனால் இன்று மதியம் முதல் அவர் அணிந்திருக்கும் ஆடையும் அவர் பார்க்கும் மக்களும் அந்த தோரணையும் கொஞ்சம் “வேற லெவலில்” தான் இருக்கிறது.
திமுக தொண்டர்கள் முதல் பலரும், என்ன ஒரு ”வைப்” முதல்வரிடம் என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்ய இந்த நேரத்தில் அவருடைய புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை மாலை துபாய் சென்றார். துபாயில் உள்ள இந்திய தூதர் அமன் பூரி முதல்வரை வரவேற்றது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இந்த பயணத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளும் உடன் சென்றனர்.
முதல்வர் ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள தொழிலதிபர்களை சந்தித்து மாநிலத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார். மேலும் துபாய் எக்ஸ்போ 2022 இல் தமிழ்நாடு பெவிலியனையும் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “