/tamil-ie/media/media_files/uploads/2020/12/mk-stalin321.jpg)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "ஒரு பொண்ணை கல்யாணம் கட்டி கொடுக்க ரூ.5,000 - ரூ.10,000 இருந்தால் போதும்” என்று பேசியதாக வீடியோவை குறிப்பிட்டு நெட்டிசன்கள் திமுக எதிர்ப்பாளர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தினமும் ஒரு அரசியல் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. சமீபத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2,500 ரூபாய் உடன் 1,500 ரூபாய் சேர்த்து 5000 ரூபாயக கொடுங்கள் என்று கூறியதாக ஒரு வீடியோ திமுக எதிர்ப்பாளர்களால் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோவுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த திமுக சமூக ஊடகப் பிரிவினர் அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு ஸ்டாலின் பேசியதை திரித்து வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். மேலும், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற திமுகவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலின் உண்மையில் என்ன பேசினார் என்பது குறித்து உண்மையான வீடியோவையும் வெளியிட்டனர்.
அந்த வீடியோவில் மு.க.ஸ்டாலின், “அதிமுக அரசு பொங்கலுக்காக 2,500 ரூபாய் கொடுக்கப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். நாங்கள் அதை வரவேற்கிறோம். அதை வேண்டாம் என்று சொல்லவில்லை. அப்போதே வரவேற்றிருக்கிறோம். நாங்கள் 5,000 கொடுங்கள் என்று கூறினோம். ஆனால், அதிமுக 2,500 ரூபாய் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள். கொரோனா காலத்தில் முன்பு 1000 ரூபாய் கொடுத்தீர்கள் இப்போது 2,500 கொடுக்கிறீர்கள். உங்கள் கணக்குப்படி 2,500 உடன் 1,000 ரூபாயைக் கூட்டிக்கொள்ளுங்கள். 3,500 ரூபாய் ஆகிறது. அந்த 5,000 ரூபாய்க்கு இன்னும் எவ்வளவு மிச்சம் இருக்கிறது? 1,500 ரூபாய் இருக்கிறது. அதனால், அந்த 1,500 ரூபாயையும் சேர்த்து கொடுங்கள் என்றுதான் கூறுகிறோம்” என்று பேசியுள்ளார்.
இந்த நிலையில், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், பெற்றோர்கள் ஒரு பொண்ணை கட்டிக்கொடுக்க ஒரு 5000 ரூபாய் - 10,000 ரூபாய் இருந்தால் போதும் என்று பேசியதாக மற்றொரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு நெட்டிசன்கள் மற்றும் திமுக எதிர்ப்பாளர்களால் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஸ்டாலின் பேசியதாக பகிரப்பட்ட ஒரு வீடியோவில், “ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்யனும்னா, அந்த பெண்ணைப் பெற்றெடுத்திருக்கக்கூடிய பெற்றோர்கள் பல துன்பங்களுக்கு பல கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். ஏன்னா? பணம் இருக்காது, வசதி இருக்காது. இப்பலாம் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்கனும்னா அட்லீஸ்ட் ஒரு 5,000 ரூபாய் 10,000 ரூபாய் இருந்தால்தான் ஒரு கல்யாணத்தை சிறப்பா ஓரளவுக்கு கல்யாணம் பண்ணலாம்” என்று ஸ்டாலின் கூறுவதாக அமைந்துள்ளது.
மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சை குறிப்பிட்டு நெட்டிசன்கள், திமுக எதிர்ப்பாளர்கள் கிண்டல் செய்து வீடியோவை ட்ரோல் செய்துவருகின்றனர்.
எங்க ஸ்டாலின் உங்களுக்கு பேசவே தெரியாதா ஏதாவது பேசணும்னு ஏனனபதுக்காக பேசுறீங்களே உங்களுக்கு மனசாட்சியே இல்லையா உங்கவீட்டு கல்யாணம் கல்யாணம் ஐயாயிரம் பத்தாயிரத்திற்கு கல்யாணம் பண்ணி இருக்கீங்களா மனசாட்சி இல்லையா உங்களுக்கு மனசாட்சியோட பேசுங்க pic.twitter.com/wlHlua31Bf
— Vijayakumar AIADMK (@vijay809813) December 31, 2020
ஒரு பெண்ணை கல்யாணம் செஞ்சு கொடுக்கணும்னா அட்லீஸ்ட் 5000 ரூபா 10000 ரூபா இருந்தால் சிறப்பா ஓரளவுக்கு செஞ்சு கொடுக்க முடியும்
- ஸ்டாலின் ????
# அப்ப தலைவர் மூளை ஜாம் ஆகி நிக்குற வருசம் 1980 போலிருக்கு ???? pic.twitter.com/SQbwVvNO6X
— ஊர்க்குருவி (@ssivanld) December 31, 2020
அதிமுகவைச் சேர்ந்த ஒருவர், “எங்க ஸ்டாலின் உங்களுக்கு பேசவே தெரியாதா ஏதாவது பேசணும்னு ஏனனபதுக்காக பேசுறீங்களே உங்களுக்கு மனசாட்சியே இல்லையா உங்கவீட்டு கல்யாணம் கல்யாணம் ஐயாயிரம் பத்தாயிரத்திற்கு கல்யாணம் பண்ணி இருக்கீங்களா மனசாட்சி இல்லையா உங்களுக்கு மனசாட்சியோட பேசுங்க” என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு பெண்ணை கல்யாணம் செஞ்சு கொடுக்கணும்னா அட்லீஸ்ட் 5000 ரூபா 10000 ரூபா இருந்தால் சிறப்பா ஓரளவுக்கு செஞ்சு கொடுக்க முடியும்
- ஸ்டாலின்
எந்த நூற்றாண்டுல இருக்குற தெய்வமே.....
????????????#Copy_Paste pic.twitter.com/Wl0axf8B79
— SENTHIL (@bojisen) December 31, 2020
நெட்டிசன் ஒருவர், “ஒரு பெண்ணை கல்யாணம் செஞ்சு கொடுக்கணும்னா அட்லீஸ்ட் 5000 ரூபா 10000 ரூபா இருந்தால் சிறப்பா ஓரளவுக்கு செஞ்சு கொடுக்க முடியும்
- ஸ்டாலின், எந்த நூற்றாண்டுல இருக்குற தெய்வமே...” என்று ட்வீட் செய்துள்ளார்.
இப்படி ஸ்டாலின் பேசியதாக சமூக ஊடகங்களில் நெட்டிசன்களும் திமுக எதிர்ப்பாளர்களும் கிண்டல் செய்வதற்கு, திமுகவினர் யாரும் இந்த வீடியோவுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.