By: WebDesk
Updated: June 3, 2018, 10:48:39 AM
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது தனது உரைகளின் போது, சில தகவல்களை தவறாக பதிவு செய்வார். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தை குடியரசு தினம் என்றும், பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக பிரதமர் மன்மோகன்சிங் என்றும் பேசி நெட்டிசன்களின் கலாய்ப்புக்கு உள்ளானார்.
அதேபோல், ‘யானை வரும் முன்னே, மணியோசை வரும் பின்னே’ என்று பழமொழியை மாற்றி பேசியும் கிண்டலுக்கு ஆளானர். இந்நிலையில், இன்று கலைஞர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முன்னதாக, நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கலைஞரின் பிறந்தநாளை மாற்றி தவறாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Mk stalin wrongly mentioned karunanidhis birthday anniversary