New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/02/Typical-DESI-CHAKI.jpg)
மிக்ஸி, கிரைண்டர் என வந்துவிட்ட சூழ்நிலையில், இந்த வித்தியாசமான மாடர்ன் இயந்திரக் கல்லில் மாவரைக்கிற வீடியோ பற்றி நெட்டிசன்கள் நகைச்சுவையாக கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
Viral Video: மர கைப்பிடி வைத்த மாவரைக்கும் இயந்திரக் கல்லுக்கு பதிலாக இரண்டு பாதி பாட்டில், மோட்டர் பொருத்திய இயந்திரக் கல் மாவரைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இயந்திரக் கல்லுக்கு பதிலாகம் மிக்ஸி, கிரைண்டர் என வந்துவிட்ட சூழ்நிலையில், இந்த வித்தியாசமான மாடர்ன் மாவரைக்கும் இயந்திரக் கல் பற்றி நெட்டிசன்கள் நகைச்சுவையாக கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
பொதுவான பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வு வேண்டும் என்றால் அதில் இந்தியர்கள் புத்திசாலித்தனத்திற்கு பெயர் பெற்றவர்கள். அந்தக் காலத்தில் மாவரைக்கும் இயந்திரக் கல்லை வைத்து, ஒரு சின்ன மோட்டர் பொருத்தி இட்லி மாவு அரைக்கும் இயந்திரக் கல்லாக மாற்றி செலவு குறைந்த மாற்று மாடர்ன் மாவரைக்கும் இயந்திரக் கல்லைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தக் கால பாரம்பரிய இயந்திரக் கல் என்பது கீழே ஒரு வட்ட வடிவ கனமான கல் இருக்கும். அதற்கு மேல் ஒரு வட்ட வடிவ கனமான கல் இருக்கும். அதில் ஒரு மரக் கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கும். மேலே உள்ள வட்டக் கல்லில் துளைகள் இருக்கும். அந்த துளைகள் வழியாக தானியங்களைப் போட்டு தானியங்களை மாவாக அரைப்பார்கள். இதைத்தான் தானியங்களை அரைக்கப் பயன்படுத்துவார்கள். இப்போதும்கூட அரிதாக கிராமப்புறங்களி பயன்படுத்தவே செய்கிறார்கள்.
நவீன கருவிகளின் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் இயந்திரக் கல்லுக்கு மாற்றாக, மிக்ஸி, கிரைண்டர் வந்துவிட்டது. இப்போது எல்லோரும் கிரைண்டர், மிக்ஸியைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், இணையத்தில் வைரலாகி வரும் மாடர்ன் இயந்திரக் கல்லில் மாவரைக்கிற வீடியோவில், மர கைப்பிடிக்கு பதிலாக இரண்டு பாதி பாட்டில்கள் வைத்து அதில் தண்ணீர் ஊற்றப்படுகிறது. மோட்டர் பொருத்திய இயந்திரக் கல்லில் ஒருவர் உளுந்து பருப்பு போட்டு மாவு அரைப்பதைப் பார்க்க முடிகிறது.
Caption this #desi ingenuinity. pic.twitter.com/inQfrlt6Ef
— Hari Chandana (@harichandanaias) February 22, 2023
இந்த வீடியோவை ஐ.ஏ.எஸ் அதிகாரி, ஹரி சந்தனா, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேசி புத்திசாலித்தனம்’ என்று தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
இந்த விடீயோ 10,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைக் குவித்துள்ளது. சில பயனர்கள் நகைச்சுவையாக கம்மெண்ட் செய்து வருகின்றனர். -மேலும் ஒரு பயனர் இது எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை அறிய ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒரு பயனர், ‘மாடர்ன் சக்கி’ அல்லது ‘நவீன மாவரைக்கும் இயந்திரக் கல்’ என்று கூறியுள்ளர். மற்றொரு பயனர், “இந்த தொழில்நுட்பம் நன்றாக இருக்கிறது. அவர்கள் உண்மையில் என்ன தயார் செய்கிறார்கள்” என்று கேட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.