குட்டி நண்பனை நாடாளுமன்றத்திற்கே வரவழைத்த மோடி..இணையமே தேடும் அந்த குழந்தை யார்?

மோடி ஜி இவ்வளவு ஆசையாக கொஞ்சி விளையாடுகிறாரே? என்ற கேள்வியையே திரும்ப திரும்ப கேட்க தொடங்கினர்

modi baby internet viral : கடந்த 2 நாட்களாக ஒட்டு மொத்த இணையவாசிகள் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரே கேள்வி யார் அந்த குழந்தை? என்பது தான். மோடியுடன் நாடாளுமன்றத்தில் கொஞ்சி விளையாடி வைரலான குழந்தை யார் என்பதை தெரிந்துக் கொள்ள இணையவாசிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிரதமர் மோடி நேற்றைய தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் “தனது ஸ்பெஷல் நண்பன் தன்னை சந்திக்க நாடாளுமன்றம் வந்ததாக” கூறியிருந்தார். கூடவே அந்த ஸ்பெஷல் நண்பனான குட்டி பாப்பாவுடன் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டார்.

 

View this post on Instagram

 

A very special friend came to meet me in Parliament today.

A post shared by Narendra Modi (@narendramodi) on

பார்ப்பதற்கே க்யூட்டாக இருந்த அந்த புகைப்படம் அடுத்த சில மணி நேரத்த்கிலேயே வைரலானது. நெட்டிசன்கள் பலரின் கவனமும் யார் அந்த குழந்தை? மோடி ஜி இவ்வளவு ஆசையாக கொஞ்சி விளையாடுகிறாரே? என்ற கேள்வியையே திரும்ப திரும்ப கேட்க தொடங்கினர். இந்திய அளவில் அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

மில்லியன் பார்ப்வையாளர்கள் அந்த புகைப்படத்தை இதுவரை லைக் செய்துள்ளனர். முதலில் அந்த பாப்பா நாடாளுமன்ற அலுவல்களைக் காண வந்திருப்பவர்களில் ஒருவருக்கு சொந்தமானதாக இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் விசாரித்து பார்த்ததில்  பாஜக எம்.பி. சத்திய நாராயணன் ஜதியாவின் பேரன் என்பது தெரியவந்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close