மோடி சிக்கிம் இயற்கையை ரசித்து அவரே, புகைப்பட கலைஞராக மாறி எடுத்த பிரமிக்கம்வைக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் சுமார் 605 கோடி ரூபாய் செலவில் பாக்யாங் நகரில் கட்டப்பட்டுள்ள முதல் விமான நிலையத்தை நாட்டுக்கு அர்பணிக்க பிரதமர் சிக்கிம் சென்றார். பிரதமர் வருகையையொட்டி சிக்கிம் மாநில விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மோடி புகைப்படங்கள்:
சிக்கிமின் இயற்கை அழகை கண்டு ரசித்த பிரதமர், செல்லும் வழி முழுவதும் ஃபோட்டோக்களை எடுத்து வந்தார். இயற்கை எழில்கொஞ்சும் மலைகளை அவரே கேமராவில் வித விதமாக போட்டோ எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதில் மிகவும் ஆர்வம் உடையவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
உலகத் தலைவர்களுடனான சந்திப்பின் போது மோடி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக அவர் மனெடுக்கும் பல சம்பவங்கள் வெளியாகி வைரலாகி உள்ளனர்.
கேமராவை விரும்பும் மோடிஜி என்று நெட்டிசன்கள் பலமுறை கிண்டல் செய்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் தானாகவே எடுத்த புகைப்படங்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளன. அவர் எடுத்த 4 போட்டோக்களை ‘ சாந்தம் மற்றும் அற்புதம்’ எனக் குறிப்பிட்டு மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
சிக்கிமில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையம், உலகிலேயே முதன்முறையாக தடுப்புச்சுவர் 80 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.வருகிற அக்டோபர் 4-ம் தேதி முதல், இந்த விமான நிலையத்தில் வர்த்தக ரீதியிலான போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையம் 9 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு இப்பொழுதுதான் திறக்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.