scorecardresearch

ஒன்றியம்னு தொடங்கி ஒன்றியத்துல முடியுது… இணையத்தை கலக்கும் அரசியல் மீம்ஸ்!

Today Social media trending political tamil memes: சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் இன்றை அரசியல் மீம்ஸ்கள்.

Modi visiting tamilnadu and stalin speech trending Tamil memes
political tamil memes

Tamil political memes: உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் இன்று இணைய பக்கங்கள் வாயிலாக தெரிந்து கொள்கிறோம். அன்றாட செய்திகளை புரியும் படியாகவும், தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தினந்தோறும் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

அந்த வகையில், இணையத்தை கலக்கும் இன்றைய அரசியல் மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் அரசியல் மீம்ஸ்கள்:

தமிழகத்தில் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதற்காக ஒரு நாள் பயணமாக நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் துரைமுருகன் ,பொன்முடி, ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமர் மோடிக்கு தாரை தப்பட்டை, பரத நாட்டியம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் பாஜகவினரும் பிரமாண்ட மற்றும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதன்பிறகு, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தனது உரையை பேசத்தொடங்கும் முன்பே முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தொண்டர்கள் பாராட்டு தெரிவிக்கும் வண்ணம் சத்தம் எழுப்பினர். அவர்கள் எழுப்பிய சத்ததாலும், கோஷத்தாலும் முதல்வர் சில நிமிடங்கள் பேசாமல் இருந்து அமைதி காத்தார்.

பின்னர் தனது உரையை தொடங்கிய அவர் பல முறை “ஒன்றிய அரசு… ஒன்றிய அரசு” என மோடி தலைமையிலான மத்திய அரசை குறிப்பிட்டு பேசினார். இதன் பிறகு, பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும், மத்திய அரசின் திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வு தொடர்பாக நேற்று முழுதும் மீம்ஸ்கள் பறக்கவிடப்பட்ட நிலையில், இன்றும் மீம்ஸ்கள் பதிவிடப்பட்டு சமூக மற்றும் இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Modi visiting tamilnadu and stalin speech trending tamil memes