viral video: உத்தரக்காண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி காப்புக் காட்டில் ஒரு தாய் சிறுத்தை தனது குட்டிகளுடன் இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்கிற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய சமூக ஊடகங்களின் காலத்தில் வனவிலங்குகளைப் பற்றிய வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. இந்த வீடியோக்கள் வனவிலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.
அந்த வகையில், உத்தரக்காண்ட் வன ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், சமோலி காப்புக் காட்டில் ஒரு தாய் சிறுத்தை தனது குட்டிகளுடன் இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்கிற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
A mother #leopard, with her four cubs trailing closely behind, in #Chamoli; leopard mother fiercely guards her cubs, trains them in essential survival skills, hunting and climbing, while defending them from #predators. pic.twitter.com/DrIQcroBx3
— Uttarakhand Forest Research Institute (@ukfrihaldwani) October 5, 2024
இந்த வீடியோ குறித்து, உத்தரக்காண்ட் வன ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிடுகையில், “ஒரு தாய் சிறுத்தை, தனது நான்கு குட்டிகளுடன், சமோலியில், மிக அருகே இருக்கிறது. தாய் சிறுத்தை தன் குட்டிகளை கடுமையாக பாதுகாத்து, உயிர்வாழும் அத்தியாவசிய திறன்கள், வேட்டையாடுதல் மற்றும் ஏறுதல் ஆகியவற்றில் பயிற்றுவிக்கிறது, அதே நேரத்தில் வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளது.
In the rugged terrains of Chamoli, a graceful mother leopard prowls silently, her four cubs shadowing her every step-a vigilant guardian of the wild. She moves with the quiet strength of a queen, her presence commanding respect and awe. Each step she takes is a lesson for her… pic.twitter.com/Dr3KD5zaEX
— Supriya Sahu IAS (@supriyasahuias) October 6, 2024
இந்த வீடியோவை தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ குறித்து அவர் குறிப்பிடுகையில், “சமோலியின் கரடுமுரடான நிலப்பரப்பில், ஒரு அழகான தாய் சிறுத்தை அமைதியாக சுற்றித் திரிகிறது, அதன் நான்கு குட்டிகள் அதன் ஒவ்வொரு அடியிலும் நிழலாகத் தொடர்கின்றன, வனத்தின் விழிப்புடன் பாதுகாவலாக தாய் சிறுத்தை செல்கிறது. இந்த தாய் சிறுத்தை ஒரு ராணியின் அமைதியான வலிமையுடன் நகர்கிறது, அதனுடைய இருப்பு மரியாதை மற்றும் பிரமிப்பைக் கட்டளையிடுகிறது. சிறுத்தை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தன் குழந்தைகளுக்கு ஒரு பாடம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
காட்டில், இரவு நேரத்தில் ஒரு தாய் சிறுத்தை தனது 4 குட்டிகளுடன் பள்ளத்தில் இருந்து சாலைக்கு வந்து நடந்து செல்லும் காட்சி மனதை உற்சாகப்படுத்தி விடுகிறது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருவதால் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.