Advertisment

பாம்புகள் இணையில் ஆடியதைப் பார்த்து குழம்பிப்போன கீரிப்பிள்ளை; வைரல் வீடியோ

இரண்டு பாம்புகள் பிண்ணிப் பிணைந்து இணையில் ஆடியதைப் பார்த்து கீரிப்பிள்ளை ஒன்று குழம்பிபோய் திரியும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mongoose confused seeing dance of the two snakes, sanke love dance, mangoose, viral video, tamil video news, கீரிப்பிள்ளை, இணையில் ஆடிய பாம்புகள், வைரல் வீடியோ, tamil viral video news, forest video news, jungles video news

Mongoose confused seeing dance of the two snakes, sanke love dance, mangoose, viral video, tamil video news, கீரிப்பிள்ளை, இணையில் ஆடிய பாம்புகள், வைரல் வீடியோ, tamil viral video news, forest video news, jungles video news

இரண்டு பாம்புகள் பிண்ணிப் பிணைந்து இணையில் ஆடியதைப் பார்த்து கீரிப்பிள்ளை ஒன்று குழம்பிபோய் திரியும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

கொரோனா பொது முடக்க காலத்தில் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளதால், பலரும் தங்கள் ஆண்ட்ராய்டு போன்களில் வீடியோக்களைப் பார்த்தும் சமூக ஊடகங்களில் பயனித்தும் பொழுதைக் கழித்து வருகின்றனர். இதனால், முன்னெப்போதும் இல்லாத வகையில், சமூக ஊடகங்கள் வீடியோக்களால் நிரம்பி வழிகின்றன.

பொதுவாக வன விலங்குகள், காணுயிர் விலங்குகள் வீடியோவுக்கு பெரும் வரவேற்பு இருக்கும். அதிலும் பாம்பு கீரிப்பிள்ளை சண்டை வீடியோக்களுக்கு பெரிய ஈர்ப்பு இருக்கும். அந்த வரிசையில், இரண்டு பாம்புகள் காதலில் பின்னிப் பிணைந்து இணைந்து ஆடிக்கொண்டிருக்கும்போது, அங்கே வந்த கீரிப்பிள்ளை ஒன்று பாம்புகளை நெருங்கி செல்கிறது. பாம்புகள் கயிறு போல பிண்ணிப் பிணைந்து இருப்பதைப் பார்த்த கீரிப்பிளை குழப்பமடைந்து பின்வாங்கிச் சென்று விடுகிறது. பாம்புகள் தங்கள் எதிரி கீரிப்பிள்ளை தாக்குவதற்கு வந்து குழப்பத்தில் சென்றதைக்கூட தெரியாமல் இணைந்து ஆடிக்கொண்டிருக்கின்றன. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா ஐஎஃப்எஸ், “கீரிப்பிள்ளை பார்ப்பதற்கு சூப்பரான உயிரினம். ஆனால், அதை குடியிருப்பு பகுதிகளில் காண முடியாது. ஆனால், இந்த கீரிப்பிள்ளை, பாம்புகள் இணையில் ஆடுவதைப் பார்த்து நம்பமுடியாத அளவில் நிச்சயமாக குழம்பிப் போய்விட்டது” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment