கீரிப்பிள்ளை ஒன்று கருநாகப் பாம்பை ஒரே தவ்வில் எகிறி வாயில் கவ்விப் பிடிக்கும் கடித்து இழுத்துச் செல்லும் வீடியோ பார்ப்பவர்களை மிரள வைத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கீரி – பாம்பு, புலி – மான், பாம்பு-தவளை, எலி-பூனை என்று உயிரினங்களிடையே உணவுச் சங்கிலி அடிப்படையில் பகையென்பது தொடர்ந்து கொண்டே வருகிறது.
இதில் கீரியும்-நச்சுகொண்ட நாகமும் சம எதிரிகளாக மோதுவதைப் பலரும் பார்த்திருக்கலாம். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பாம்பு என்றால் படை நடுங்கலாம், ஆனால், கீரிப்பிள்ளை நடுங்காது. இதுதான் இயற்கை தேர்வின் விளையாட்டு. வித்தைக் காட்டுபவர்களால் பார்வையாளர்களை சுவாரஸியப்படுத்துவதற்காக கீரிக்கும்-பாம்புக்கும் சண்டை விடுவதாகக் கூறி கடைசிவரை கீரி – பாம்பு சண்டையைக் காட்டவே மாட்டார்கள்.
The smaller the creature, the bolder its spirit
Survival of the Fittest#wildearth #wildlife #greenscreen pic.twitter.com/wFLnGSRh3a— DCF West Nashik (@wnashik_forest) September 8, 2020
நீங்கள் இதுவரை கீரி – பாம்பு சண்டையை பார்த்தது இல்லை என்றால் இந்த வீடியோவைப் பாருங்கள். டிசிஎஃப் வெஸ்ட் நாசிக் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு கீரிப்பிள்ளை ஒரு மரத்தின் அருகே வருகிறது. அங்கே தாழ இருக்கும் மரத்தின் கிளையில் ஒரு கருநாகப் பாம்பு இருக்கிறது. மரத்தின் கிளையில் பாம்பு இருப்பதைப் பார்த்த கீரி உடனே கிளையில் தவ்வி ஏறி எட்டி பாம்பின் தலையைக் கவ்விப் பிடிக்கிறது. கீரிப்பிள்ளையின் பிடியில் இருந்து விடுபட அந்த பாம்பு எவ்வளவோ போராடுகிறது. ஆனால், கீரிப்பிள்ளை வாயிலிருந்து பாம்பின் தலையை விடாமல் அதன் தலையை துண்டிக்க கடித்து இழுத்துச் செல்கிறது. பார்ப்பவர்களை மிரள வைக்கும் இந்த கீரி – பாம்பு சண்டை வீடியோ சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.