scorecardresearch

ஜன்னல் கதவை திறக்க சொல்லி “மம்மா, மம்மா…” என கெஞ்சும் செல்லக்கிளி – வைரல் வீடியோ!

இந்த க்யூட்டான வீடியோவை பார்த்து உங்களின் நாளை துவங்குங்கள்.

Monk Parakeet knocks the window to open viral video
Monk Parakeet knocks the window to open viral video

Monk Parakeet knocks the window to open viral video : ஊரெல்லாம் கொரோனா கொரோனா கொரோனா என்று சொல்ல கேட்கும் போதெல்லாம், மனம் அழுத்தமாவதை நீங்கள் உணர்ந்தால் உங்கள் மன அழுத்தத்தை குறைக்கத்தான் இந்த வீடியோ. சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்தால் உங்களின் மன அழுத்தம் குறைய நிச்சயம் வாய்ப்பு உள்ளது.

தான் வளர்ந்து வரும் வீட்டின் ஜன்னல் கதவை திறக்க சொல்லி மம்மா, மம்மா என்று அழைக்கும் இந்த செல்லக் கிளியின் மொழியை கேட்டால் அனைவருக்கும் மன அழுத்தம் சட்டென மறைந்துவிடும். அடிக்கடி ஜன்னல் கதவை தன்னுடைய அலகால் அழகாக தட்டி, மம்மா, மம்மா என்று அழைக்கிறது அந்த குட்டிப் பறவை.

மேலும் படிக்க : அமைச்சர் விஜயபாஸ்கர் ஆட்கள் மிரட்டுகிறார்களா? மீரா மிதுன் புகார்

ஒரு புறம் பார்ப்பதற்கு அது மிகவும் அழகாக இருந்தாலும், ஒரு வீடியோவிற்காக இப்படியா, ஒரு வாயில்லா ஜீவனுக்கு ஜன்னல் கதவை திறக்காமல் மனம் நோக வைப்பது என்றும் மனம் பதறுகிறது. ஆனால் வீடியோவின் இறுதியில் அந்த பச்சைக் கிளி அவளுடைய வீட்டிற்கு சென்றுவிட்டாள். இந்த க்யூட்டான வீடியோவை பார்த்து உங்களின் நாளை துவங்குங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Monk parakeet knocks the window to open viral video