மனிதர்களைப் போல, குரங்கு ஒன்று சிங்கக்குட்டிக்கு பாட்டிலில் பாலுட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. குரங்கு, சிங்கக் குட்டிக்கு தாய்மை உணர்வுடன் பாலுட்டும் இந்த வீடியோ நெகிழ்ச்சியாக இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
எல்லா உயிரினங்களுக்குள்ளும் அன்பு ஒரு ஆதார சக்தியாக இருக்கிறது. அதே போல எல்லா உயிரினங்களிலும் தாய்மை ஒரு முக்கியமான உறவாகவும் உணர்வாகவும் இருக்கிறது. மனிதர்களைப் போல விலங்குகளும் அன்பை ஆதரவை தங்கள் இனங்களுக்குள்ளாக மட்டும் பகிர்ந்துகொள்ளாமல் பிற விலங்கினங்களுடனும் பகிர்ந்துகொள்கின்றன.
மனிதர்கள், நாய், பூனை, ஆடு, மாடு போன்ற விலங்கினங்களுடன் அன்பைப் பகிர்ந்துகொள்வது போல, பிற விலங்கினங்களும் அன்பையும் நேசத்தையும் பகிர்ந்துகொள்கின்றன.
குரங்கு ஒன்று சிங்கக்குட்டிக்கு ஃபீடிங் பாட்டிலில் அன்புடன் தாய்மை உணர்வுடன் பால் ஊட்டுகிற வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், குரங்கு சிங்கக் குட்டிக்கு தாய்மை உணர்வுடன் அரவணைத்து ஃபீடிங் பாட்டிலில் பாலூட்டுகிறது. சிங்கக்குட்டிக்கு வளர்ப்புத்தாயாகி உள்ள அந்த குரங்கு கடைசியில் சிங்கக் குட்டிக்கு அழகாக முத்தம் தருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரையும் நெகிழச் செய்துள்ளது. ஆனால், இந்த வீடியோ எப்போது, எங்கே எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
இந்த வீடியோ குறித்து வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா குறிப்பிடுகையில், “கடையில் இந்த வளர்ப்புத் தாய் முத்தமிடுகிறது” என்பதைத் தெரிவித்துள்ளார்.
சிங்கக் குட்டிக்கு குரங்கு பாலூட்டும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் நெகிழ்ச்சியாக இருப்பதாக் தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"