New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/19/KTduVGwUmKu3gDnx8Nma.jpg)
டெட்ரா பேக் புரூட்டியைப் பெற்ற பிறகுதான் குரங்கு தொலைபேசியைக் கீழே போட்டது.
டெட்ரா பேக் புரூட்டியைப் பெற்ற பிறகுதான் குரங்கு தொலைபேசியைக் கீழே போட்டது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், மதுரா மற்றும் பிருந்தாவனில் இப்படி குரங்குகள் தொந்தரவு செய்வது ஒன்றும் புதிதல்ல. இந்த புத்திசாலித்தனமான குரங்குகள் தங்கள் கைகளில் கிடைக்கும் கண்ணாடிகள், செல்போன்கள் அல்லது சிற்றுண்டிகள் என பறித்துச் செல்வதில் ரொம்ப திறமைசாலிகள் - அப்படி பறித்துச் சென்றால் அவற்றுடன் பேசி அதற்கு உரிய உணவுப் பொருட்களை வழங்கப்படும் வரை அந்த பொருட்களை பணயமாக வைத்திருக்கும். அப்படி ஒரு நிகழ்வுதான் பிருந்தாவனில் நடந்திருக்கிறது.
மதுராவில் ஒரு நபரிடம் இருந்து சாம்சங் எஸ்.25 அல்ட்ரா ஸ்மாரட் போனை குரங்கு ஒன்று பறித்துக்கொண்டு சென்றது. அந்த குரங்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட விலை உயர்ந்த செல்போனை தூக்கிகொண்டு ஒரு கட்டிடத்தின் பால்கனியில் அமர்ந்து கொண்டது. அந்த குரங்கிடம் இருந்து போனை திரும்ப வாங்க போனின் உரிமையாளர் மற்றும் அங்கு இருந்த சிலர் குரங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குரங்குக்கு சாப்பிடுவதற்காக புரூட்டி ஜூஸ் பாக்கெட்டை தூக்கி எறிந்தனர். ஆனால், அது சரியாக குரங்கு கைக்கு கிடைக்கவில்லை. ஒரு புரூட்டி ஜூஸ் பாக்கெட் சரியாக குரங்கின் கைக்கு கிடைத்ததும். உடனடியாக கையில் வைத்திருந்த செல்போனை தூக்கிப் போட்டுவிட்டது. அந்த செல்போனை, கீழே இருந்தவர்கள் பத்திரமாக பிடித்துக்கொண்டனர்.
இந்த வைரல் வீடியோவைப் பாருங்கள்:
இந்த சம்பவத்தின்போது, எடுக்கப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு கட்டடத்தின் பால்கனியில் குரங்கு கையில் செல்போன் உடன் அமர்ந்திருப்பதும், கீழே இருக்கும் மனிதர்கள் குரங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதும், பின்னர், அவர்கள் குரங்குக்கு டெட்ரா புரூட்டி பேக் தூக்கு வீசுவதும், குரங்கு புரூட்டி பேக்கை பிடித்தூக்கொண்டு செல்போனை போடுவதும் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், வடிவேலு பாணியில் இது என்ன நூதன வழிப்பறியா இருக்கில்ல என்று வியக்கின்றனர். விலங்குகள் எல்லாம் இப்படி மனிதர்கள் மாதிரி டீலிங் பண்ணா எப்படி என்று கேட்டு சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ குறித்து ஒரு பயனர், “அதற்கும் டீலிங் தெரியும்” என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு பயனர், “இதுதான் மனித-விலங்கு வரலாற்றில் வேகமான வர்த்தகம்” என்று கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார்.
அதே நேரத்தில், சிலர் குரங்குகளால் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். “குரங்கு ஒருமுறை என் கண்ணாடியை தூக்கிச் சென்றது... 50 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது, பிறகு ஒரு ஃப்ரூட்டி வாங்கிக்கொண்டது” என்று ஒருவர் நினைவு கூர்ந்தார்.
செல்போன் தூக்கிச் சென்ற குரங்கிடம் பேரம் பேசி புரூட்டி பேக் கொடுத்து செல்போனை மீட்ட இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. மற்றொரு வைரல் வீடியோவில், ஒரு குரங்கு ஹல்தி விழாவில் நுழைந்து விருந்தினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அது வேகமாக உள்ளே நுழைந்து இனிப்புகளுக்காக வரிசையில் நின்றது. யாரும் எதிர்வினையாற்றுவதற்கு முன்பு, அது முடிந்தவரை பல லட்டுகளை அதன் வாயிலும் சிறிய கைகளிலும் திணித்து, எடுத்துக்கொண்டு சென்றது - அனைவரும் திகைத்துப்போய் கையுடன் நின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.