/tamil-ie/media/media_files/uploads/2020/06/New-Project-2020-06-04T180634.639.jpg)
monkey king cobra fights video, monkey snake fights, viral video, குரங்கு பாம்பு சண்டை, குரங்கு ராஜநாகம் சண்டை, வைரல் வீடியோ, monkey snake fighting viral video, wild animal video, Tamil viral video, tamil video news,Tamil trending video, Tamil video
பாம்பைக்கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். படை வேண்டுமானல் பாம்பைக் கண்டு நடுங்கலாம், நான் பயப்படமாட்டேன் என்று படமெடுத்து சீறும் ராஜநாகத்தைப் பார்த்து பயப்படாமல் ஒரு குரங்கு சுற்றி வளைத்து தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா பொது முடக்க காலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வெறு வகையான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் நிரம்பி வழிகிறது. நெட்டிசன்கள் மத்தியில் சினிமா நடிகர்கள், நடிகைகளின் வீடியோக்களுக்கு இருக்கிற அதே அளவு ஈர்ப்பு வன விலங்குகளின் வீடியோக்களுக்கும் எப்போதும் நெட்டிசன்கள் மத்தியில் இருந்து வருகிறது. வன விலங்குகளின் வித்தியாசமான வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. அதிலும் பாம்பு படங்கள் என்றால் அச்சத்துடன் பார்வையாளர்கள் பார்க்கத் தவறுவதே இல்லை.
அந்த வகையில் காட்டில் படமெடுத்து சீறும் ஒரு ராஜநாகத்தைப் பார்த்து பயப்படாமல் ஒரு குரங்கு சுற்றிவளைத்து தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Monkey fighting a king Cobra & coming out triumphant.
One of its kind????
( Free wild from chains & cages. Forest is their rightful place) pic.twitter.com/OiNoAJEnrQ
— Susanta Nanda IFS (@susantananda3) June 3, 2020
இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி சுஸந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், காட்டில் ஒரு பெரிய ராஜநாக பாம்பு படமெடுத்து சீறி நிற்கிறது. அதன் அருகே ஒரு குரங்கு எதிர்த்து நிற்கிறது. ராஜநாகம் உயர்ந்து படமெடுத்து தாக்க முயற்சிக்கும்போது அந்த குரங்கு பயப்படாமல் ராஜநாகத்தை சுற்றி வளைத்து தாக்குகிறது. பாம்பு திரும்புகிற வேகத்துக்கு குரங்கு சுற்றி வந்து தாக்குகிறது. குரங்கின் தாக்குதலில் நிலைகுலைந்துபோன ராஜநாகம் சுருண்டு விழுகிறது. இறுதியில் ராஜநாகத்தை வென்ற குரங்கு அந்த இடத்தில் இருந்து செல்கிறது.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், ஒரு குரங்கு படமெடுத்து சீறும் ஒரு பெரிய ராஜநாகப் பாம்பையே கண்டு அஞ்சாமல் சுற்றி வளைத்து தாக்கி வெற்றி பெற்றுள்ளது. ஒரு குரங்கு பயப்படாமல் கொடிய விஷமுள்ள பாம்புகளில் ஒன்றான ராஜநாகத்தை தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.