தெருநாய்கள் ஒருபக்கம், குரங்கு மறுபக்கம்: டெல்லி மெட்ரோ ரயிலில் உலா வந்த குரங்கு: வைரல் வீடியோ

டெல்லியில் தெருநாய்கள் விவாதம் ஒருபுறம் இருக்க, டெல்லி மெட்ரோ ரயிலுக்குள் ஒரு குரங்கு நுழைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டெல்லியில் தெருநாய்கள் விவாதம் ஒருபுறம் இருக்க, டெல்லி மெட்ரோ ரயிலுக்குள் ஒரு குரங்கு நுழைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

author-image
WebDesk
New Update
Monkey in Delhi Metro

தெரு நாய்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் விவாதங்கள் நடந்து வரும் நிலையில், மக்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக, டெல்லி மெட்ரோ ரயிலுக்குள் குரங்கு ஒன்று நுழைந்துள்ளது.

டெல்லியில் தெரு நாய்களை பிடித்து, 6 முதல் 8 வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால், தெரு நாய்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், மக்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக, டெல்லி மெட்ரோ ரயிலுக்குள் குரங்கு ஒன்று நுழைந்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

வழக்கமாக சண்டைகள், நடனங்கள் என டெல்லி மெட்ரோ பல விசித்திரமான நிகழ்வுகளைக் கண்டிருந்தாலும், இந்த நிகழ்வு சற்று வித்தியாசமானது. மெட்ரோ ரயிலுக்குள் நுழைந்த குரங்கு, பெட்டிக்குள் இருந்த பயணிகளை கடந்து, சக பயணியைப் போல நடந்து சென்றது.

இந்த வீடியோவில், இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் ஆச்சரியத்துடனும் அமைதியாகவும் இந்தக் காட்சியைப் பார்த்தனர். சிலர் தங்கள் செல்போனில் அந்த காட்சியைக் வீடியோவாகப் பதிவு செய்தனர். இந்த ரயில் வைஷாலி நோக்கிச் சென்றதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடியோவைப் பாருங்கள்:

Advertisment
Advertisements

ரயில் ஊழியர்கள் வந்து அந்த குரங்கை வெளியே அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த விவேக் யாதவ் (@vivek4news) என்ற பயனர், “வைஷாலி மெட்ரோவில் நுழைந்த குரங்கு, மெட்ரோ முழுவதும் சுற்றித் திரிந்தது, பின்னர் மெட்ரோ ஊழியர்களால் வெளியேற்றப்பட்டது” என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.

டெல்லி மெட்ரோவில் விலங்குகள் பயணிப்பது இது முதல் முறையல்ல. சமீபத்தில், ஒரு புறா பெண்கள் பெட்டிக்குள் அமைதியாக அமர்ந்திருந்தது செய்திகளில் இடம்பிடித்தது. ஆனால், அந்த புறா ஒரே இடத்தில் அமர்ந்திருக்க, இந்த குரங்கோ ரயில் முழுவதும் துறுதுறுவென சுற்றி வந்து பயணிகளுக்கு ஒரு எதிர்பாராத அனுபவத்தைக் கொடுத்தது.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: