/tamil-ie/media/media_files/uploads/2020/04/New-Project-2020-04-21T152233.833.jpg)
monkey cloths washing video, monkey dress washing video, குரங்கு, குரங்கு துணி துவைக்கும் வீடியோ, குரங்கு துணி துவைக்கும் வீடியோ வைரல், monkey washing viral video, monkey washing video goes viral, வைரல் வீடியோ, தமிழ் வீடியோ, ட்ரெண்டிங் வீடியோ, tamil video news, tamil viral video news, latest trending video news, latest tamil video news
'ஆடறா ராமா... பாடறா ராமா...’ என்று குரங்கை விளையாட்டு காட்டி பார்த்திருப்பீர்கள். ஆனால், ஒரு குரங்கு பழக்கப்படுத்தாமல் தானாக வந்து துணி துவைப்பதைப் பார்த்திருக்கிறீர்களா. அப்படி குரங்கு அடித்து துணி துவைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.
பொதுவாக மனித இனம் உள்பட விலங்கினங்கள் எல்லாமே Imitation(போலச் செய்தல்) செய்கையில் இருந்துதான் அதனதன் வழியில் புதிய செயல்களை கண்டடைகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குரங்கு கல்லை பயன்படுத்தியது குறித்து ஆய்வாளர்கள் இப்போதுதான் குரங்குகள் கல்லைப் பயன்படுத்துகின்றன. இது மனிதர்களைப் போல பயன்படுத்தலாம் அல்லது இந்த செயல் அந்த குரங்குடன் முடிந்துவிடலாம் என்று தெரிவித்தனர்.
மனிதர்கள் குரங்கு போன்ற விலங்குகளை ஒரு செயலைச் செய்வதற்கு பயிற்றுவிக்கிறார்கள். அதை மீண்டும் செய்யச் சொன்னால் அதே செயலைச் செய்யும். அதே போல, மனிதர்கள் செய்யும் செயலை கவனிக்கும் விலங்குகள், அப்படியே செய்யவும் முயற்சிக்கும். அந்த வரிசையில் மனிதர்கள் துணி துவைப்பதைப் பார்த்த குரங்கு ஒன்று துணி துவைத்த வீடியோ சமூகஊடகங்களில் வைரலாகிவருகிறது.
If you haven’t seen this imitation at its best.... pic.twitter.com/ylA8O3v5D1
— Susanta Nanda IFS (@susantananda3) April 21, 2020
குரங்கு ஒன்று தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த துணிகளை மனிதர்களைப் போல அடித்து துவைக்கிற வீடியோவை வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், தோட்டத்தில் ஒரு பெரியா பாத்திரம் உள்ளது. அதில் சிறிது தண்ணீரும் இருக்கிறது. ஒரு குரங்கு துணிகளை அந்த பாத்திரத்தில் நனைத்து மனிதர்களைப் போல துணிகளை துவைக்கிறது. அடி அடி என்று வெளுத்து துவைக்கிறது. குரங்கு துணி துவைப்பதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் பார்த்து வியந்து சிரிக்கின்றனர். அந்த குரங்கை விரட்ட முயன்றாலும் துணி துவைப்பதைக் கற்றுக்கொண்ட குரங்கு, விடாமல் துணி துவைப்பதில் மும்முரமாக இருக்கிறது.
குரங்கு என்னமா அடித்து துணி துவைக்கிறது என்பதை வாசகரக்ள் வீடியோவில் பாருங்கள். ஆனால், இப்படி துணி துவைக்கிறது என்று கேட்க கூடாது. புதுசா துணி துவைக்கும்போது அப்படிதானே இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.