New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/12/monkey-attacks-lion.jpg)
வலிமையான காட்டு விலங்குகளான சிறுத்தையும் சிங்கமும் குரங்குகளின் தாக்குதலுக்கு பயந்து புறமுதுகிட்டு ஓடுகிற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக நடக்கும் நிகழ்வுகளுக்கு மாறாக ஏதெனும் நடந்தால் அவை பெரிய அளவில் மக்களின் கவனத்தைப் பெறும் அந்த வகையில், வலிமையான காட்டு விலங்குகளான சிறுத்தையும் சிங்கமும் குரங்குகளின் தாக்குதலுக்கு பயந்து புறமுதுகிட்டு ஓடுகிற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
காடுகள் மற்றும் காட்டு விலங்குகளைப் பற்றிய வீடியோ காட்சிகளுக்கு எப்போது மனிதர்களை ஈர்ப்பவையாக உள்ளன. பொதுவாக வனத்தில் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற வேட்டை விலங்குகள் வேட்டயாடுகிற வீடியோக்களை ஆவலுடன் பார்க்கும் நிறைய பார்வையாளர்கள் உள்ளனர். இந்த வேட்டை விலங்குகள் வேட்டையாடுகிறபோது, காட்டெருது, எருமை போன்ற விலங்குகல் தங்களைத் தற்காத்துக்கொள்ள திரும்ப தாக்குவதும் அவ்வப்போது அரிதாக நடக்கும். அத்தகைய வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பல ஆயிரம் பார்வையாளர்ளை ஈர்ப்பவையாக உள்ளன.
அப்படி இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா 2020-ல் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பதிவிட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Anything can happen in 2020☺️ pic.twitter.com/aKnY9BDMKz
— Susanta Nanda (@susantananda3) December 1, 2020
அந்த வீடியோவில், ஒரு நீர் நிலை அருகே சிறுத்தை ஒன்று தண்ணீர் குடிக்க செல்கிறது. ஆனால், அங்கே சுற்றி இருந்த நிறைய குரங்குகள் கூட்டமாக சேர்ந்துகொண்டு சிறுத்தையைத் தாக்குவதற்கு பாய்ந்து துறத்த பயந்துபோன சிறுத்தை பதறி ஓடுகிறது. குரங்குகளும் சிறுத்தயை விடாமல் துரத்திச் செல்கின்றன.
இந்த காட்சியைத் தொடர்ந்து அடுத்து வரும் காட்சியில், ஒரு சிங்கத்தை குரங்கு ஒன்று நேருக்கு நேராக சந்தித்து முன்னேறுகிறது. சிங்கம் பயந்து பின் வாங்குகிறது. ஒரு கட்டத்தில் குரங்கும் பாய்ந்து துறத்த சிங்கம் பயந்து புறமுதுகிட்டு ஓடுகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் காடுகளில் மாற்றம் நிகழ்ந்தால் மனிதர்களின் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படி, வலிமையான அச்சாத வேட்டை விலங்குகளுக்கு இரையாகும் என்று கருதப்பட்ட குரங்கு சிறுத்தையையும் சிங்கத்தையும் துறத்துகிற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.