கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சீனா மற்றும் தென் கொரியாவில் அதன் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இத்தாலியில் கொரோனா தீவிரமாகப் பரவி வருகிறது. அங்கு 15,113 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் இத்தாலியைச் சேர்ந்த 16 பேர், இந்தியாவைச் சேர்ந்த 64-பேர் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவர் என இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 81-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
பார்வையற்ற ரசிகர் சிலை தான் மொத்த போட்டிக்கும் ரசிகன்... சாம்பியன்ஸ் லீக்கில் நெகிழ்ச்சி!
உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் கொரோனா பாதிப்பு காரணமாக, மிகக் கடுமையான பாதுகாப்பு விதிமுறை பின்பற்றப்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகளின் வருகை அங்கு சுத்தமாக குறைந்துவிட்டது.
இந்நிலையில், தாய்லாந்தில் சாலை ஒன்றில் வழக்கமாக அதிகமான சுற்றுலாப் பயணிகள் திரள்வது வாடிக்கை. அப்போது அங்கும் இங்குமாய் வரும் குரங்களுக்கு அவர்கள் உணவளிப்பார்கள். இது வழக்கமான நடக்கும் ஒரு நிகழ்வு.
கொரோனா காரணமாக, சுற்றுலாப் பயணிகள் எவருமே அங்கு வருகை தராத நிலையில், உணவின்றி நூற்றுக்கணக்கான குரங்குகள் அங்கே சுற்றித் திரிகின்றன.
8-ம் வகுப்பிலேயே இவ்வளவு அறிவா? தலைமை ஆசிரியருக்கு மாணவன் எழுதிய கொரொனா கடிதம்
பசியால் வாடும் குரங்குகள் ஒரேயொரு வாழைப்பழத்துக்காக அந்த சாலையில் சண்டைப் போட்டுக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
பார்ப்போம் நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம், கொரோனா தீவிரத்தின் வெளிப்பாட்டை நம் கண் முன் அப்பட்டாக முன்னிறுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”