viral video: சமூக ஊடகங்கள் கோலோச்சும் காலத்தில், தினமும் உலகம் முழுவதும் ஆயிரக் கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக, வனவிலங்குகள் வீடியோக்கள்தான் அதிக அளவில் வைரலாகி வருகிறது.
மனிதர்களைப் போல விலங்குகள் செயல்படும்போது, அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போவோம். குழந்தைகள் முதல் சற்று வளர்ந்த பெரியவர்கள் சிலர் வரை கம்பிகளில் சறுக்கி விளையாடுவதை விரும்புவார்கள். மனிதர்கள் மட்டுமல்ல, குரங்குகளும் அப்படி கம்பிகளில் சறுக்கி விளையாடும் வீடியோ வேடிக்கையாக இருக்கிறது.
வனவிலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வும் புரிதலையும் ஏற்படுத்தும் விதமாக ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் காடுகளில் படம்பிடிக்கப்பட்ட வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் ஆயிரக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மலைக் கோயில் படிக்கட்டுகளின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கம்பிகளில் குரங்குகள் மனிதர்களைப் போல சறுக்கி விளையாடி ஆச்சர்யப்படுத்தி வருகின்றன.
“உங்களுக்கு உள்ளே இருக்கும் குழந்தையை அடையாளம் காணாத வாழ்க்கை மிகவும் குறுகியது.” என்று குறிப்பிட்டு ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், மலைக் கோயில் படிக்கட்டுகளின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கம்பிகளில் குரங்குகள் மனிதர்களைப் போல வேகமாக சறுக்கி விளையாடி சாகசம் செய்வதை பார்க்க வேடிக்கையாகவும் நமக்குள்ளே இருக்கும் குழந்தை மனமும் மகிழ்ச்சி அடைவதை உணர முடியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"