கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி அதிரம்பள்ளி நீர் வீழ்ச்சி, பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்து நீர் வீழ்ச்சியை ரசித்து செல்வர். கேரளா மட்டுமல்லாது தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதியளித்துள்ளனர்.
பல்வேறு மொழி படங்கள் தமிழ், மலையாளம், கர்நாடக மொழி படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர்களின் படங்களும் இங்கு படமாக்கப்பட்டுள்ளது. பாடல் காட்சி, சண்டை காட்சிகள் நீர்வீழ்ச்சி பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பாதுகாக்கபட்ட பகுதியாக உள்ளது. நீர்வீழ்ச்சி சுற்றிலும் அடர்ந்த காடுகள் உள்ளன. அவ்வப்போது வனவிலங்குகளின் நடமாட்டத்தை காணமுடியும். சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக கேரளா வனத்துறையினர் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், அங்கு வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ஒற்றை கடமான் உணவு தேடி வெளியே வந்தது. அப்பகுதியில் உள்ள பொன்னி என்ற ஹோட்டல் முன் கடமான் சுற்றித் திரிந்ததை காண முடிந்தது. கடமானை கண்ட சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“