New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/11/oYRfEfUi781o3Fq6LmBp.jpg)
ஒரு சிறிய எருமைக் கன்றை சுற்றி வளைத்த சிங்க கூட்டத்தையும், அதை காப்பாற்றும் தாய் எருமையின் வீரம் செறிந்த காட்சியும் பார்வையாளர்களை பரவசப்பட வைத்திருக்கிறது.
ஒரு சிறிய எருமைக் கன்றை சுற்றி வளைத்த சிங்க கூட்டத்தையும், அதை காப்பாற்றும் தாய் எருமையின் வீரம் செறிந்த காட்சியும் பார்வையாளர்களை பரவசப்பட வைத்திருக்கிறது.
கென்யாவின் மாசாய் மாறா வனப்பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது. ஒரு சிறிய எருமைக் கன்றை சுற்றி வளைத்த சிங்க கூட்டத்தையும், அதை காப்பாற்றும் தாய் எருமையின் வீரம் செறிந்த காட்சியும் பார்வையாளர்களை பரவசப்பட வைத்திருக்கிறது.
அந்த வீடியோவில், ஒரு சிங்கக் கூட்டம் கன்றை வேட்டையாடச் சுற்றி வளைத்தபோது, தாய் எருமை திடீரென சிங்கங்களை விரட்டிப் பாய்கிறது. கொம்புகளை பயன்படுத்தி, அந்த சிங்கங்களை எதிர்த்து தாய் எருமை போராடுகிறது. தனது கன்றை காக்க, உயிரைக் கூட தியாகம் செய்யத் தயார் என காட்டும் தாய் எருமையின் துணிச்சல் பார்ப்பவர்களின் மனதை உருக்குவதாக உள்ளது.
சற்று நேரம் கடந்தபின், அந்த தாய் எருமைக்கு துணையாக ஒரு எருமைக் கூட்டமே ஓடி வருகிறது. சிங்கங்களை மிரட்டும் அளவுக்கு எருமைகளின் கூட்டம் இருந்ததால், களமும் காட்சியும் மாறுகிறது. இதுபோன்ற தருணங்களை பார்த்தால், காட்டில்கூட சமூக வாழ்க்கை, நம்பிக்கை, தாய்மை போன்ற உணர்வுகள் எப்படி இயற்கையாக வெளிப்படுகின்றன என்பதை உணர முடிகிறது.
இந்த வீடியோவை கென்யாவைச் சேர்ந்த பயண வழிகாட்டி மற்றும் புகைப்படக்காரர் டெனிஸ் கோஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “அதிக வருத்தமான காலை. ரொங்காய் பிரிவைச் சேர்ந்த சிங்கக் கூட்டம் கன்றை தாக்கியது. ஆனால், தாய் எருமை விட்டு கொடுக்கவில்லை. எருமைக் கூட்டமே கன்றை காப்பாற்ற முயற்சித்தது” என அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது 2.4 கோடி பார்வைகளை கடந்து, பலரின் உணர்வுகளை தூண்டி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து ஒருவர், “தாய் பாசத்தின் சக்தி என்னவென்று இந்த வீடியோ சொல்லுகிறது!” என ஒருவர் எழுதியிருந்தார்.
“மீதி கூட்டம் வந்த வேளையில் எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சி சொல்ல முடியாதது!” என மற்றொருவர் குறிப்பிட்டார்.
“இது ஒரு ஆஸ்கார் விருது வாங்க வேண்டிய காட்சி!” என மற்றொரு பார்வையாளர் பதிவு செய்திருந்தார்.
துரதிருஷ்டவசமான கன்றின் நிலை
இந்த உணர்ச்சிகரமான காட்சிக்கு பின்னால் ஒரு வருத்தமான முடிவும் உள்ளது. “கன்றை காப்பாற்ற முயற்சி நடந்தது உண்மைதான். ஆனால், சிங்கங்கள் கடைசியில் வெற்றி பெற்றன. அந்த தாய் எருமை தோல்வியடைந்த காட்சியை காண முடியும். இது தான் இயற்கையின் கோரமான ஆனால், உண்மையான வட்டம் – ‘வலியது வாழும்’ என கோஷால் பின்னணி பதிவில் கூறியுள்ளார்.
இந்த வீடியோ வெறும் வேட்டையாடும் காட்சியை காட்டவில்லை. அதைவிட, காட்டிலும் உணர்வுகள் உள்ளன. தாய்-குழந்தை பாசம், குழுவின் ஒற்றுமை, உயிர்க்காக விடாமுயற்சி போன்றவற்றை உணர்த்தும் அரிய தருணமாக மாறியுள்ளது. இவ்வாறான இயற்கையின் அற்புதங்களை காண, அது உயிர் வாழ்வதற்காக மட்டும் அல்ல, உயிர் காப்பதற்காகவும் என்பதையும் இந்த வீடியோ உணர்த்துகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.