New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/03/Zeenat-Aman-1-8.jpg)
Co-Pilot Flight
சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல
Co-Pilot Flight
சாதனை படைக்கவும், சரித்திரம் படைக்கவும் வயது தடையில்லை, வேறு எதுவும் தேவையில்லை, முயற்சியும், ஆர்வமும்தான் முக்கியமாக தேவை என்பது பலமுறை நிரூபிக்கப்பட்ட உண்மை.
பைலட்டாக பணிபுரிவதைவிட த்ரில்லிங்கான வேலை வேறெதுவும் இல்லை. வானம்தான் எல்லை. புதிய புதிய மனிதர்கள், நாடுகள், அனுபவங்கள், விமான விபத்துகளிலிருந்து தப்பித்த அனுபவங்கள், ஹாட்பீட் எகிரும் நிகழ்வுகள் என பல்வேறு புதுமைகளை அந்த வேலையின் மூலம் நாம் அடைய முடியும்.
அந்த வேலையில் வீட்டிற்கு ஒருவர் இருந்தாலே, அவர்களிடமிருந்து கேட்பதற்கு நிஜக் கதைகள் இருக்கும். ஆனால், ஒரு குடும்பத்தில் தாய் - மகள் இருவருமே ‘பைலட்டுகளாக’ இருந்தால்? அடபோங்க! உண்மைதான். இவங்க இருவரும் கோ பைலட்டாக இருக்கும் விமானத்திற்கு வரும் பயணிகள் இவர்களை கண்டு ஆச்சரியம் அடைகின்றனர்.
அமெரிக்காவில் இயங்கும் டெல்டா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் அம்மா -மகள் இருவரும் கோ பைலட்டாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியது. வெளியான சில மணி நேரத்தில் லைக்ஸ் மற்றும் கமெண்டுகள் அள்ளியது. பல்வேறு தரப்பினரும் இவர்கள் இருவரையும் சாதனை பெண்கள் என வர்ணித்து வருகின்றன.
Just flew with this mother daughter flight crew on Delta from LAX to ATL. Awesome. @Delta @EmbryRiddle #erau pic.twitter.com/HYLl65H5p1
— John R. Watret (@ERAUWatret) 17 March 2019
சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல, தோல்வியின் முடிவல்ல, முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என நிரூபித்திருக்கிறார்கள் இந்தச் சாதனைப் பெண்மணிகள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.