scorecardresearch

குட்டி யானைக்கு சாலையைக் கடக்க கற்றுத் தரும் தாய் யானை; வைரல் வீடியோ

வன விலங்குகளில் மிகவும் நுண்ணறிவும் நுண்ணுணர்வும் மிக்கது யானைகள். ஒரு யானை காட்டு வழியே செல்லும் சாலையை எப்படிக் கடப்பது என்று தனது குட்டிக்கு கற்றுத் தரும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Elephant viral video, mother elephant teaching road coss to calf, viral video, சாலையைக் கற்றுத் தரும் தாய் யானை, வைரல் வீடியோ

வன விலங்குகளில் மிகவும் நுண்ணறிவும் நுண்ணுணர்வும் மிக்கது யானைகள். ஒரு யானை காட்டு வழியே செல்லும் சாலையை எப்படிக் கடப்பது என்று தனது குட்டிக்கு கற்றுத் தரும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வன விலங்குகளில் மிகப் பெரிய விலங்கு யானைகள். யானைகள் நுண்ணறிவும் நுண்ணுணர்வும் கொண்டவை. யானைகளின் வழித்தடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்துக்கொள்ளும்போதுதான், மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே மோதல் நடக்கிறது. சூழலியலாளர்கள் காட்டை பாதுகாப்பது யானைகள்தான் என்று கூறுகிறார்கள்.

வனவிலங்குகள் பற்றி மனிதர்களுக்கு பெரிய ஆர்வம் இருக்கிறது. வனவிலங்குகளை நெருங்கிப் பார்க்க முடியாது என்பதால்தான், வன விலங்குகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பாரிவையாளர்களை ஈர்த்து வைரலாகின்றன.

இந்த வனத்துறை அதிகாரிகளான ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலரும் சமூக ஊடகங்களில் வனவிலங்குகளின் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இத்தகைய வீடியோக்கள் வனவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வையும் புரிந்தலையும் ஏற்படுத்துகின்றன.

அண்மையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு, ஒரு யானை காட்டு வழியே செல்லும் சாலையை எப்படிக் கடப்பது என்று தனது குட்டிக்கு கற்றுத் தரும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ குறித்து சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தாய் யானை குட்டி யானைக்கு எப்படி சாலையைக் கடப்பது என்று கற்றுக் கொடுக்கிறது. இது ஒரு சோக யதார்த்தம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை சந்தானராமன் என்பவர் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மனிதர்கள்தான் சாலையைப் பாதுகாப்பாக கடப்பது என்று கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், மனிதர்களின் நடவடிக்கையால் யானைகள் கூட சாலையை எப்படி பாதுகாப்பாக கடப்பது என்று கற்றுக்கொள்வது உண்மையில் ஒரு சோகம்தான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Mother elephant seems teaching her baby how to cross the road video goes viral