New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/09/mother-hen-fights-with-King-Cobra.jpg)
Viral Video: தாய்க்கோழி தனது குஞ்சுகளைப் பாதுகாப்பதற்காக மொத்த வலிமையைத் திரட்டி பருந்துபோல ராஜநாகத்திடம் சண்டையிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்ப்பவர்கள் தாய்ப்பாசத்தை எண்ணி நெகிழ்ந்து போகிறார்கள்.
ரத்தமும் சதையுமாக உள்ள எல்லா உயிரினங்களிலும் தாய்ப்பாசம் என்பது பொதுவான ஒரு உணர்வாக இருக்கிறது. தாய்ப்பாசம் என்பது மனிதன் என்றாலும் கோழியானாலும் ஒன்றுதான். ஒரு கோழி தனது குஞ்சுகளை காப்பாற்றுவதற்காக கொடும் விஷம் கொண்ட ராஜநாகத்துடன் மோதி பாதுகாத்திருக்கிறது. பலத்தை விட பாசம் பெரிது என்று கட்டியம் கூறும் தாய்க்கோழி ராஜநாகத்துடன் மோதிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தாய்ப்பாசம் ஏன் உன்னதமானதாகவும் ஒப்பற்றதாகவும் மதிக்கப்படுகிறது. தனது குழந்தைக்கு ஒரு ஆபத்து என்றால் தனது உயிரையும் கொடுத்து காப்பார்கள். எதிர்ப்பது எவராக இருந்தாலும் துணிந்து மோதி தனது குழந்தையைக் பாதுகாப்பார்கள். அது மனிதராக இருந்தாலும் சரி கோழியாக இருந்தாலும் சரி தாய்ப்பாசம் என்பது ஒன்றுதான். இதற்கு சாட்சியம் கூறுவதைப் போல, பதறவைக்கும் ஒரு வீடியோ வெளியாகி அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
ஒரு வீட்டில் ஒரு கோழி குஞ்சு பொறித்துள்ளது. அந்த கோழி தனது குஞ்சுகளுடன் தனது கூண்டு போன்ற இடத்தில் இருக்கிறது. அப்போது எங்கிருந்தோ ஒரு பெரிய ராஜநாகம் பாம்பு நுழைகிறது. இதைப் பார்த்ததும் கோழி ராஜநாகத்திடம் இருந்து தனது குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்காக துணிந்து எதிர்க்கிறது.
ராஜநாகத்திடம் இருந்து தனது குஞ்சுகளைப் பாதுகாப்பதற்காக தாய்க்கோழி தனது மொத்த வலிமையைத் திரட்டி பருந்துபோல ராஜநாகத்திடம் சண்டையிடுகிறது.
தாய்க்கோழி கொஞ்சமும் பயந்து ஓடாமல், ராஜநாகத்தை தனது குஞ்சுகளை நெறுங்கவிடாமல் விரட்டி போராடி பாதுகாக்கிறது. கோழி கொக்கரித்து ஆர்ப்பாட்டம் செய்கிறது. ஒருக்கட்டத்தில் தாய்க்கோழியின் தாக்குதலால் ராஜநாகமே பின்வாங்குகிறது. இந்த காட்சி அங்கே வைக்கப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகி இருக்கிறது.
மிகவும் கொடும் விஷம் கொண்ட ராஜநாகம் பாம்பு பலம் மிக்கதாக இருக்கலாம். கோழி பலவீனமானதாக இருக்கலாம். ஆனால், பலத்தை விட பாசம் பெரிது இல்லையா! தாய்க்கோழி வீரமாக ராஜ நாகத்துடன் பயங்கரமாக மோதி குஞ்சுகளை பாதுகாத்த வீடியோவைப் பார்த்த பலரும் தாய்ப்பாசத்தை எண்ணி நெகிழ்ந்து போகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.