New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/11/Screenshot-35.jpg)
mother rat rescues baby video : இரையை வைத்துள்ள விஷப்பாம்பை எதிர்த்து போராடுவது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால், சினம்கொண்ட தாயின் முன்பு விஷப்பாம்பு ஒன்றும் பெரிய விசயமில்லை.
மனிதர்கள் உட்பட்ட அனைத்து விலங்குகளுக்கும் உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளாக தாய் நிறைவேற்றி வைக்கிறாள். தங்கள் குழந்தைகள் சந்திக்கும் ஆபத்தை எதிர்க்கும் சக்தி, ஆற்றல் தாயிடம் இயல்பாகவே காணப்படும்.
வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா பகிர்ந்துள்ள வீடியோவில், " தாய் எலி ஒன்று தனது குட்டியை துரத்தி செல்லும் பாம்பை விடமால் துரத்துகிறது. பாம்பிடம் அகப்பட்டுக் கொண்ட தனது குட்டியின் உயிருக்கு ஒவ்வொரு நொடியும் ஆபத்தை என்பதனை உணர்ந்த தாய் எலி, ஒரு கட்டத்தில் போராடி தனது குட்டியைக் காப்பாற்றுகிறது. இருப்பினும், இந்த பாம்பால் தனது குட்டிக்கு என்பதனை உறுதி செய்யும் விதமாக தாய் எலி பாம்பை அந்த இடைத்தை விட்டே அப்புறப்படுத்துகிறது."
If you haven’t seen what mothers courage is...
It rescues it baby from the snakes mouth. Unbelievable.. pic.twitter.com/3u6QD2PAl0
— Susanta Nanda (@susantananda3) November 27, 2020
மேலும், சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பதிவில்,"தாயின் தைரியம் என்னவென்பதை நீங்கள் பார்த்தது இல்லை என்றால்... பாம்பின் வாயிலிருந்து குழந்தையை மீட்கும் காட்சி.நம்பமுடிகிறதா...” என்று பதிவிட்டார்.
இரையை கொண்டுள்ள ஒரு விச பாம்பை எதிர்த்து போராடுவது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால், சினம்கொண்ட தாயின் முன்பு விஷப்பாம்பு ஒன்றும் பெரிய விசயமில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.